ஜம்முன்னு நட மகளே.. முந்தானை மண்படாமல்..இந்த தந்தை தாங்கி கொள்கிறேன்!

சென்னை : நடிகர் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

விக்ரம்

விக்ரம்

நீண்ட நாட்களாக கமலின் படத்தை எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இத்திரைப்படம் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. விக்ரம் படத்தின் வெற்றியால் கமல் மிகவும் உற்சாகமடைந்துள்ளார் அதோடு விக்ரம் திரைப்படம் பல கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்களுக்கு மேலான நிலையிலும் விக்ரம் படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடம் குறையவே இல்லை.

இந்தியன் 2

இந்தியன் 2

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே சூட்டோடு இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க முயற்சி எடுக்கப்பட்டது. இதன்பின்னர், இயக்குநர் சங்கர் மற்றும் லைகா புரொடக்ஷன் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டதை அடுத்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி சென்னையில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் தொடங்குகிறது. இதில் கமல்ஹாசன் இல்லாத காட்சிகள் படமாக்கப்படுகின்றன. எஞ்சியிருக்கும் காட்சிகள் விரைவாக படமாக்கப்பட உள்ளன.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

அதேபோல அக்டோபர் 2ந் தேதி, பிக் பாஸ் சீசன் 6 தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய சீசன்களை போல இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான புரமோ வெளியாகி உள்ளது. சின்னத்திரை வெள்ளித்திரை என கமல் அடுத்தடுத்து பிஸியாகி உள்ளார். தொடர்ந்து அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களின் கதைகளையும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஜம்முன்னு நட மகளே

ஜம்முன்னு நட மகளே

இந்நிலையில், கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது அப்பாவுடன் ஸ்டைலிஷ் உடையில் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு போட்டோவில் தனது மகளின் முந்தானையை பிடித்தபடி நின்கிறார் கமல். இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் பலர் சுத்திபோடுங்க என கூறி வருகின்றனர். இந்த போட்டோஷூட்டை, பொன்னியின் செல்வன் இசைவெளியிட்டு விழாவிற்கு வரும் போது எடுத்ததாக அக்ஷரா ஹாசன் அந்த பதிவில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X