என்னால முடியல.. நான் வீட்டுக்கே போறேன்.. கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுத அக்ஷரா.. யார் காரணம்?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து அக்‌ஷரா ரெட்டிக்கு பிரியங்கா டார்ச்சர் கொடுத்து வரும் நிலையில், கன்ஃபெஷன் ரூமிற்கு சென்று கதறி அழுது விட்டார் அக்‌ஷரா.

பிக் பாஸ் நிகழ்ச்சியே வேண்டாம். நான் வீட்டுக்கே போயிடுறேன் என அக்‌ஷரா ரெட்டி அழுது புலம்பியதை பார்த்த ரசிகர்கள் அவர் மீது நிஜமாவே பரிதாபம் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

தன்னிடம் காயினே இல்லாத போதும் தன்னை பிரியங்கா டார்கெட் செய்வது ஏன் என்றே தெரியவில்லை என்றும் அக்‌ஷரா குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

கலங்கிய அக்‌ஷரா

கலங்கிய அக்‌ஷரா

அக்‌ஷராவிடம் காயின் இருக்கிறது என்றும் அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்றும் பிரியங்கா செய்த மோசமான செயல்களால் அக்‌ஷரா ரெட்டி கண் கலங்கி அழ ஆரம்பித்தார். பிக் பாஸ் வீட்டில் இருக்கவே தனக்கு பிடிக்கவில்லை என்கிற மனநிலையில் இருந்த அக்‌ஷராவை பிக் பாஸ் அழைத்து பேசினார்.

கன்ஃபெஷன் ரூமில் அக்‌ஷரா

கன்ஃபெஷன் ரூமில் அக்‌ஷரா

பிக் பாஸ் கன்ஃபெஷன் ரூமில் கடந்த 4 சீசன்களாக பல போட்டியாளர்கள் கதறி அழுத காட்சியை ரசிகர்கள் கண்டுள்ளனர். இந்த சீசனில் கன்ஃபெஷன் ரூமிற்கு அக்‌ஷராவை அழைத்து பிக் பாஸ் அவருக்கு என்ன பிரச்சனை என்று கேட்க மீண்டும் கதறி அழ ஆரம்பித்து விட்டார் அக்‌ஷரா.

கதறி அழுத அக்‌ஷரா

கதறி அழுத அக்‌ஷரா

நல்லவளாக இருப்பதே இங்கே பெரிய பிரச்சனையாக உள்ளது. என்னை வேண்டுமென்றே பிரியங்கா டார்கெட் செய்து பிரச்சனையை கிளப்பி வருகிறார். அவர் போல சத்தமாக பேசி சண்டை போடும் ஆள் நான் கிடையாது. அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது என பிக் பாஸிடம் தனது மன குறை முழுவதையும் கூறி கதறி அழுது விட்டார் அக்‌ஷரா.

வீட்டுக்கே போறேன்

வீட்டுக்கே போறேன்

ஆனால், அக்‌ஷரா தன்னால் தொடர்ந்து இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்றும் தன்னுடைய வீட்டுக்கே போய் விடுவதாகவும் பிக் பாஸிடம் கதறி அழுதார். இந்த கேமும் புரியவில்லை இவர்கள் போடும் சண்டையிலும் விருப்பமில்லை என தெளிவாக சொல்லி விட்டார் அக்‌ஷரா. பிரியங்காவால் தான் தனக்கு இங்கே பிரச்சனை என்றும் தெளிவு படுத்தி விட்டார்.

பிக் பாஸ் ஆறுதல்

பிக் பாஸ் ஆறுதல்

இது வெறும் கேம் தான் எதையுமே பர்சனலா எடுத்துக்காதீங்க.. நீங்க உங்க மனசாட்சி படி உங்க கேமை தொடர்ந்து விளையாடுங்க எல்லாம் சரியாகிவிடும் என அக்‌ஷராவுக்கு பிக் பாஸ் ஆறுதல் வார்த்தைகளை கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X