அட... என்னமா பாடுதுபா இந்த பொண்ணு… அக்ஷராவுக்கு குவியும் பாராட்டு !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 40 நாளை எட்டி உள்ளது. இதில், நாமினேட் லிஸ்டில் 7 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
பிக் பாஸ் வீட்டில் ஒருவழியாக நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை டாஸ்க் முடிந்தது.
இந்த பொம்மை டாஸ்க்கில் நிரூப் வெற்றி பெற்றார். அவருக்காக விளையாடிய ஐக்கி பெர்ரி அவரை வெற்றி பெற செய்தார்.

அக்ஷரா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் ஒரு மாதத்தை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகங்களை விட பரிச்சயமில்லாத பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் அக்ஷராவும் ஒருவர். இவர் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தவுடனே அவரை அமலா பால் என்று ரசிகர்கள் புகழத் தொடங்கி விட்டனர். இதனால் அக்ஷராவிற்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அழகு பொம்மை
பிக் பாஸ் சீசன் 5ன் விருதுகள் வழங்கும்விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு பிரிவுகளுக்கு வாக்கெடுப்புகள் நடைபெறும். இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விருதை ராஜு மற்றும் பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்கினார்கள். விழா தொடங்குவதற்கு முன்பாக ஒவ்வொரு போட்டியாளரையும் அழைத்து பிரியங்கா பேசினார். அப்போது , அக்ஷராவை அழைத்த பிரியாங்கா, பிக் பாஸ் வீட்டில் பொம்மை போல அழகா இருப்பவர் அக்ஷரா அவரை புகழ்ந்து தள்ளினார்.

குயிலா கூவிய அக்ஷரா
அக்ஷரா சூப்பரா பாடுவாங்க எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்க என்றார். இதையடுத்து,அக்ஷரா என்ன சொல்ல... ஏது சொல்ல... என்ற பாட்டை பாடி அனைவரையும் எதுவுமே சொல்ல முடியாதபடி வாய் அடைந்து விட்டார். அட நம்ப அக்ஷராவா இது என்ன குரலுடா என்று கேட்கும் அளவுக்கு அழகாக பாடினார் அக்ஷரா.

சிறப்பான உடை
இதையடுத்து தொடங்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில், Bes player விருதை நிரூப்பும், பெஸ்ட் entertainer விருதை ராஜுவுக்கும், அக்ஷராவுக்கு சிறப்பாக உடை அணிந்து இருப்பதாக விருது கொடுக்கப்பட்டது. இந்த விருதை பெற்ற அக்ஷரா பிக் பாஸ் வீட்டில் எனக்கு விடைத்து இருக்கும் முதல் விருது இது, இன்னும் நிறைய விருதுகளை பெறுவேன் என்றார்.


Click it and Unblock the Notifications











