பிக்பாஸில் இருந்து வெளியேறிய அக்ஷரா செய்த காரியம்... அன்சீனில் நெகிழ்ந்துபோன தாமரை செல்வி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அக்ஷரா தாமரை செல்விக்கு உடைகள் மற்றும் காலணிகளை அனுப்பி வைத்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 வாரங்கள் கூட முழுவதுமாக இல்லை.
இதனால் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. இதில் அக்ஷராவும் வருணும் வெளியேற்றப்பட்டனர்.

அனைவரும் நாமினேஷனில்
இதனை தொடர்ந்து டிக்கெட் டூ ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது. இதற்காக இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களையும் பிக்பாஸ் நாமினேஷன் செய்துள்ளார். ஃபினாலேவுக்கான டிக்கெட்டை பெற ஹவுஸ்மேட்ஸ் வேற லெவலில் விளையாடி வருகின்றனர்.

டார்கெட் செய்யப்படும் தாமரை
அக்ஷராவும் வருணும் இல்லாததால் தாமரை தனித்து விடப்பட்டது போல் உள்ளார். இருப்பினும் நிரூப், ராஜு மற்றும் சிபி ஆகியோர் ஓரளவுக்கு தாமரைக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். அதேநேரத்தில் அமீர், பிரியங்கா, பாவனி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் தாமரையை டார்கெட் செய்து வருகின்றனர்.

நெகிழ்ந்துப்போன தாமரை
அக்ஷராவும் வருணும் இல்லாததை தாமரையும் உணருகிறார். இந்நிலையில் தாமரைக்கு அக்ஷரா, டிரெஸ் மற்றும் 6 செட் காலணிகளை அனுப்பியுள்ளார். இதனால் நெகிழ்ந்துப் போன தாமரை செல்வி அக்ஷராவுக்கு உருக்கமாக நன்றி கூறியுள்ளார். இந்தக் காட்சிகள் அன்சீனில் காட்டப்பட்டுள்ளது.

தாமரைக்கு டிரெஸ்..
இதனை பார்த்த நெட்டிசன்கள் அக்ஷராவை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த நெட்டிசன், அக்ஷரா ஒரு ஸ்வீட் ஹார்ட் என்றும் அவர் எலைட் மற்றும் பணக்கார புத்தி கொண்டவர் என்று யார் சொன்னது? அக்ஷரா 6 ஜோடி செருப்புகள் மற்றும் உடைகளை தாமரை செல்விக்கு அனுப்பி வைத்துள்ளார். அக்ஷரா தாமரைசெல்வி அன்பு உண்மையிலேயே ஜெனியூன். தாமரை செல்வி அணிந்திருந்த அணிகலன்கள் எங்கே இருந்து வந்தவை என்று இப்போது தெரிகிறது.. அக்ஷராதான் கொடுத்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

வித்தியாசமான பாண்ட்
இதனை பார்த்த மற்றொரு ரசிகர், அக்ஷரா உண்மையிலேயே ஸ்வீட் ஹார்ட்தான். அக்ஷரா, வருண், ராஜு ஆகியோருக்கு தாமரை செல்வி அக்காவிடம் ஒரு வித்தியாசமான பாண்ட் இருந்தது. இவர்கள் நான்கு பேரும் இந்த சீசன் முடிந்த பிறகு கொண்டாடப் போகிறார்கள்.. 4 பேருக்கும் பெஸ்ட் ஆஃப் லக் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











