பாலிவுட்டில் அறிமுகமாகும் அக்ஷரா கமல்ஹாசன்

By Mayura Akilan

நடிகர் கமலஹாசனின் இளையமகள் அக்ஷரா கமல்ஹாசன் பாலிவுட் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில இந்தி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார் அக்ஷரா ஹாசன். இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க நிறைய பேர் கேட்டுள்ளனர் ஆனால் நடிப்பில் ஆர்வம் இல்லை இயக்குனராக விரும்புகிறேன் என மறுத்து வந்தார் அக்ஷரா. இந்த நிலையில் அக்கா ஸ்ருதிஹாசன் தங்கை அக்ஷராவும் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகிறார்.

நடிக்க விரும்பவில்லை

நடிக்க விரும்பவில்லை

சில ஆண்டுகளாகவே அக்ஷராவை கதாநாயகியாக நடிக்க வைக்க நிறைய இயக்குநர்கள் போட்டி போட்டனர். ஆனால், இவரோ நடிப்பில் ஆர்வம் இல்லை, டைரக்ஷன்தான் பிடிக்கும் என மறுத்து வந்தார்.

உதவி இயக்குநர்

உதவி இயக்குநர்

சில இந்தி படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். இயக்குநராவதே தனது லட்சியம் என்று கூறிவந்தார்.

நடிப்பு பயிற்சி

நடிப்பு பயிற்சி

இப்போது நடிகையாக நடிக்க முடிவு செய்துள்ள அக்ஷரா தற்போது நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார்.

பால்கி படத்தில்

பால்கி படத்தில்

கும்பகோணத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்கிற பால்கி, கமல்ஹாசனின் நண்பர். இவர் இந்தியில் அமிதாப் நடிப்பில் ‘சீனி கம்', ‘பா' ஆகிய படங்களை இயக்கியவர். இவர் அடுத்து இயக்கும் படத்தில்தான் அக்ஷரா நடிக்க உள்ளார்.

அக்கா வழியில்

அக்கா வழியில்

அக்கா ஸ்ருதியை போலவே நடிப்பை தேர்ந்தெடுந்துள்ள அக்ஷரா மும்பையில் தனியாக வசிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் சில அபார்ட்மென்ட்களில் வீடு தேடி வருகிறார்.

அக்காவும் பிஸிதான்…

அக்காவும் பிஸிதான்…

அக்ஷராவின் அக்கா ஸ்ருதி தமிழ் சினிமாவில் பாடகி, இசையமைப்பாளர், நடிகை என பன்முக திறமை கொண்டவர். தமிழில் ‘3', ‘7-ஆம் அறிவு' ஆகிய படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளார். தெலுங்கு, இந்தி பக்கம் சென்று, அங்கு தற்போது பிசியான நடிகையாக உள்ளார்.

அக்ஷராவும் ஜெயிப்பாரா?

அக்ஷராவும் ஜெயிப்பாரா?

இயக்குனர், நடிப்பு என அக்ஷரா மாறி மாறி முடிவு எடுத்தாலும் அவரது சுதந்திரத்தில் அப்பா கமல், அம்மா சரிகா தலையிட விரும்பவில்லையாம். ஸ்ருதியைப் போல இவரும் ஜெயிப்பாரா என்பது களத்தில் இறங்கிய பின்னர்தான் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X