பிகினி போட்டோவில் இருப்பது நான் இல்லை, அது போலி: நடிகை அக்ஷரா

By Siva

மும்பை: ஆரம்பம் படத்தில் நடித்த அக்ஷரா கவுடா இணையதளத்தில் வெளியாகியுள்ள தன்னுடைய போலி கவர்ச்சி புகைப்படங்கள் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

அஜீத், நயன்தாரா நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அக்ஷரா கவுடா. அவர் தற்போது இந்தி படம் ஒன்றில் நடிக்க மும்பையில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் பிகினியில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Akshara upset with morphed bikini photos

இது குறித்து அக்ஷரா கூறுகையில்,

என்னுடைய போலி புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வருவது வருத்தம் அளிக்கிறது. பிகினி புகைப்படங்களில் இருப்பது நான் அல்ல. மேலும் என் பெயரில் பல போலி ஃபேஸ்புக் கணக்குகள் உள்ளன. நான் சமூக வலைதளங்களில் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் சென்னையில் படப்பிடிப்பில் உள்ளதாக போலி ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர். நான் கடந்த 2 மாதங்களாக சென்னையில் இல்லை. இதை எல்லாம் பார்க்கையில் கோபம் வருகிறது.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நான் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X