#Indian2: கமலுக்காக வெயிட்டான வில்லனை அழைத்து வரும் ஷங்கர்

By Siva

சென்னை: இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக அக்ஷய் குமார் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிக்கவிருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளது. இந்த படத்தில் காஜல் அகர்வால், தென் கொரிய நடிகை பே சூசி என்று இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர்.

இந்நிலையில் கமலுக்கு வில்லன் யார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியன் 2

இந்தியன் 2

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க அக்ஷய் குமாரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2.0 படத்தில் நடித்தபோதே அக்ஷய்க்கும், ஷங்கருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டுவிட்டதாம். அந்த நட்பு இந்தியன் 2 படத்திலும் தொடர உள்ளது.

போலீஸ்

போலீஸ்

இந்தியன் 2 படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஷங்கர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனிடம் கேட்டாராம். அஜயும் கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டாராம். இருப்பினும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களால் ஷங்கர் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

ஷங்கர்

ஷங்கர்

2.0 பட வேலைகள் முடிந்த பிறகு அக்ஷய்க்கு ஏற்ற கதாபாத்திரம் தன் புதிய படங்களில் வந்தால் நிச்சயம் அழைப்பதாக ஷங்கர் தெரிவித்திருந்தாராம். கமல் படத்தில் வில்லத்தனம் செய்ய அக்ஷய் சரியான ஆளாக இருப்பார் என்று நினைத்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

வில்லன்

வில்லன்

பாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் குறிப்பாக ஹீரோவாக நடித்து வரும் அக்ஷய் கோலிவுட்டில் தொடர்ந்து வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார். தனது கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை பார்த்து நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X