அக்ஷய் குமாரின் பொறுமையை சோதித்த 2.0: அப்படி என்ன நடந்தது?
Recommended Video

ஹைதராபாத்: 2.0 படத்தில் நடித்தபோது நடந்தது என்ன என்று தெரிவித்துள்ளார் அக்ஷய் குமார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் நாளை பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்நிலையில் படம் குறித்து அக்ஷய் குமார் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது,

கடினம்
ப்ராஸ்தடிக்ஸ் தான் கஷ்டமானதாக இருந்தது. மூன்றரை மணிநேரம் எதுவும் செய்யாமல் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார வேண்டும். 3 பேர் எனக்கு ப்ராஸ்தடிக்ஸ் செய்வார்கள். நான் பொறுமையாக இருக்க வேண்டும். அது கடினமாக இருந்தது. இந்த ப்ராஸ்தடிக்ஸ் விஷயத்தால் நான் பொறுமையானவனாக, அமைதியானவனாக மாறியுள்ளேன்.

அக்ஷய் குமார்
நான் ஏற்கனவே பொறுமையானவன் தான். ஆனால் இந்த படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பொறுமை வந்துள்ளது. மேக்கப்பை அகற்ற ஒன்றரை மணிநேரம் ஆகும். மேக்கப் போட்டுவிட்டால் நீர் ஆகாரம் தான் எடுக்க முடியும். நான் 2.0 படத்தில் நடித்தபோது தண்ணீர், ஜூஸ் தான் குடித்து நாட்களை ஓட்டினேன்.

அறிவாளி
செட்டில் நானும், ஷங்கரும் மராத்தியில் பேசிக் கொள்வோம். ஷங்கர் ஒரு திறமையான, அறிவாளி இயக்குனர். அவரின் கான்செப்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதை ஏன் வேறு யாரும் இதுவரை முயற்சி செய்யவில்லை என்று வியந்துள்ளேன். இது ஷூட்டிங் நடத்தி அதை 3டிக்கு மாற்றவில்லை. படமே 3டியில் தான் எடுக்கப்பட்டுள்ளது.

2.0
3டி படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தியேட்டர்களில் பார்க்கும் ரசிகர்களுக்கும் இது வித்தியாசமான அனுபவமாக அமையும். அனைவரும் தயவு செய்து தியேட்டருக்கு சென்று படம் பாருங்கள் என்று அக்ஷய் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











