கொரோனா பிரச்னை முடிஞ்சிருமா? தனுஷ், அக்ஷய், சாரா நடிக்கும் பட ஷூட்டிங்.. இயக்குனர் புது தகவல்!
சென்னை: தனுஷ் நடிக்கும் இந்திப் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் தனுஷ் இந்தியில் ராஞ்ஜனா என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் சோனம்கபூர் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தை இயக்கியவர் ஆனந்த்.எல்.ராய். இவர் 'தனு வெட்ஸ் மனு' உட்பட சில இந்தி படங்களை இயக்கியுள்ளார்.

நடிகை சாரா அலிகான்
இவர் இப்போது இயக்கும் படம், அட்ரங்கி ரே. இந்த காதல் படத்தில் தனுஷூடன், அக்ஷய் குமார், பாலிவுட்டின் இளம் ஹீரோயின் சாரா அலிகான் நடிக்கின்றனர். ஏ.அர்.ரகுமான் இசை அமைக்கிறார். பூஷன்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிமன்ஷு சர்மா கதை எழுதியுள்ளார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பும் தனுஷ், அக்ஷய், சாரா ஆகியோரின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.

அழுத்தமான கேரக்டர்
இதில் நடிக்க அக்ஷய் குமாருக்கு ரூ.120 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தப் படத்தில், சீனியர் ஹீரோக்களான அக்ஷய் குமார், தனுஷுடன் நடிப்பது ஏன் என்று நடிகை சாரா அலிகான் சமீபத்தில் விளக்கம் அளித்தார். 'ஸ்கிரிப்டை படித்தபோது தயக்கமாக இருந்தது. அழுத்தமான கேரக்டர். என்னால் அப்படி நடிக்க முடியுமா? என்று சந்தேகம் இருந்தது. பிறகு இது சவால்தான். செய்வோம் என்று சம்மதித்தேன் என்று கூறியிருந்தார்.

லாக்டவுன் காரணமாக
படத்தில், சாரா அலிகான் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கியது. வாரணாசியில் தனுஷ், சாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்த வருடம் காதலர் தினத்துக்கு படத்தைத் திரையிட படக்குழு முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மொத்த திட்டமும் மாறி இருக்கிறது.

அக்டோபரில் ஷூட்டிங்
எப்போது இந்தப் பிரச்னை முடிந்து ஷூட்டிங் தொடங்கும் என்று தெரியாத நிலை இருக்கிறது. இதற்கிடையே, இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபரில் மீண்டும் தொடங்க இருப்பதாக இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, 'அடுத்த ஷெட்யூல் மதுரையில். அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். பிறகு அக்ஷய்குமாருடன் மும்பை, டெல்லியில் ஒரு மாதத்துக்கு படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











