அக்ஷய் குமார் திருநங்கையாக மிரட்டும் லட்சுமி பாம் - வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நவராத்திரி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் காஞ்சனா' இந்தி ரீமேக்கான 'லட்சுமி பாம்' படத்தில் அக்‌ஷய் குமாரின் திருநங்கை லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்க

Recommended Video

Kanchana Remake Laxmi Bomb : திருநங்கையாக மிரட்டும் அக்ஷய் குமார்-வீடியோ

மும்பை: நமக்குள் இருக்கும் பெண் தெய்வத்தை வணங்கி நமது அளவில்லா வலிமையைக் கொண்டாடுவதுதான் நவராத்திரி. நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் லட்சுமி பாம் படத்தில் தனது லுக்கை அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார். பலரும் இந்த முயற்சிக்காக அக்‌ஷய் குமாருக்கு பாராட்டி வருகின்றனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த படம் 'காஞ்சனா' வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

Akshay Kumar Acts Lakshmi Bomb First Look Poster Released

'லட்சுமி பாம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார். முதலில் ஏற்பட்ட பிரச்சினையில் இந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியவர், தற்போது மீண்டும் சமரசமாகி இயக்கி வருகிறார்.

காஞ்சனா ஒரிஜினல் தமிழ் படத்தில் ஒரு அப்பாவி மனிதன் எல்லாவற்றிற்கும் பயப்படும் ஒரு கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருந்தார். அந்த அப்பாவி மனிதனை வைத்து பேய்கள் தங்களை கொன்றவர்களை எப்படி வேட்டையாடி கொலையாளிகளிடம் இருந்து நியாயம் கிடைக்க பழி வாங்குகிறது என்பது தான் கதை. அதில் ஒரே மனிதனுக்குள் மூன்று பேய்கள் இருந்தது போல் காட்சியமைக்கப்பட்டன.

ஆனால் இந்தி ரீமேக் படத்தில் கதாநாயகன் பேய்களுக்கு எளிதில் பயப்படாத அச்சமற்ற ஒரு கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளார். மேலும் மூன்று பேய்கள் அல்லாமல் ஒரே பேய் என கதைக்களத்தில் சிறிது மாற்றம் செய்துள்ளனர். இந்த ரீமேக் படம் லட்சுமி பாம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அக்ஷய் குமார் இப்படத்தில் லட்சுமி என்ற பெயரில் ஒரு திருநங்கையாக நடித்துள்ளார். அக்ஷய் குமாருடன் குட் நியூஸ் திரைப்படத்தில் இணைந்து நடித்த கியாரா அத்வானி தான் இப்படத்திலும் ஜோடி சேர்கிறார்.

'காஞ்சனா' தமிழ் படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார் சரத்குமார். இந்தக் கதாபாத்திரத்தில் இந்தியில் யார் நடிக்கவுள்ளார் என்பது முடிவாகவில்லை. இதில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியானாலும், படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

அதே போல், 'காஞ்சனா' படத்தில் லாரன்ஸும் சில காட்சிகளில் திருநங்கையாகத் தோன்றுவார். அதே போல் அக்‌ஷய் குமாரும் திருநங்கையாக நடித்துள்ளார். இந்த லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். துர்க்கை சிலையின் முன்பாக சிவப்பு நிற சேலை கட்டி திருநங்கை தோற்றத்துடன் காட்சி அளிக்கிறார் அக்ஷய்குமார் இது தொடர்பாக, "நமக்குள் இருக்கும் பெண் தெய்வத்தை வணங்கி நமது அளவில்லா வலிமையைக் கொண்டாடுவதுதான் நவராத்திரி.

இந்த மங்களகரமான நாளில் எனது 'லட்சுமி' தோற்றத்தை உங்களுடன் பகிர்கிறேன். இந்தக் கதாபாத்திரத்தை நான் ஆர்வமாக எதிர்நோக்கும் அதே நேரத்தில் பதட்டமாகவும் உணர்கிறேன். நாம் சவுகரியமாக உணரும் சூழலின் முடிவில்தான் வாழ்க்கை தொடங்குகிறது இல்லையா?" என்று தெரிவித்துள்ளார் அக்‌ஷய் குமார்.

ஒரிஜினல் காஞ்சனா படத்தில் கதாநாயகனின் தாயாரும் அவரது அண்ணி கதாபாத்திரமும் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஆனால் இந்த படத்தில் கதாநாயகனின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கும் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அக்ஷய் குமாருக்கு பேய் பிடித்த பிறகு அந்த பேயோட்டலில் முக்கிய பங்கு வகிக்கும் கியாரா அத்வானியின் கதாபாத்திரம். லட்சுமிபாம் திரைப்படம் 2020ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X