நான் இந்தியன்தாங்க... பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தார் நடிகர் அக்‌ஷய் குமார்

By

மும்பை: இந்திய பாஸ்போர்ட்டுக்கு இப்போது விண்ணப்பித்திருப்பதாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இவர் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதம், பிரதமர் நரேந்திர மோடியை நேர்காணல் செய்திருந்தார். பின்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்ஷய் குமார் வாக்களிக்கவில்லை. இது கடும் விமர்சனத்துக்குள்ளானது. அவர் வாக்களிக்காததற்கு கனடா குடியுரிமை வைத்திருப்பதுதான் காரணம் என்று கூறப்பட்டது.

Akshay Kumar addresses row over Canadian citizenship says hes applied for an Indian passport

இந்நிலையில் குடியுரிமை சர்ச்சை குறித்து அக்ஷய் குமார் விளக்கம் அளித்திருந்தார். அதில், என்னிடம் கனடா பாஸ்போர்ட் இருப்பதை மறைக்கவோ, மறுக்கவோ இல்லை. அதைப் போலவே கடந்த 7 வருடங்களாக நான் கனடா சென்றதில்லை என்பதும் உண்மையே. நான் இந்தியாவில்தான் பணியாற்றுகிறேன். இந்தியாவில்தான் வரி செலுத்துகிறேன். யாருக்கும் என் நாட்டுப்பற்றை நிரூபிக்க வேண்டிய தேவையில்லை என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அவர் இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆரம்பத்தில் நான் நடித்த 14 படங்கள் தோல்வி அடைந்தன. அதனால் என் நண்பரின் ஆலோசனைப்படி கனடாவுக்குச் சென்றேன். அப்போது கனடா குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தேன். கிடைத்தன. ஆனால் எனது 15வது படம் வெற்றி அடைந்து வாய்ப்புக்கள் குவிந்தன. பிறகு கனடாவில் பணிபுரிவது குறித்து யோசிக்கவில்லை. இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும் இல்லை. இப்போதுதான் விண்ணப்பித்துள்ளேன். நான் இந்தியன் என்பதை நிரூபிக்க இந்திய பாஸ்போர்ட்டை காட்ட வேண்டும் என கேட்பது வருத்தமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X