எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பவர்.. இளம் இசை அமைப்பாளர் திடீர் மரணத்துக்கு திரையுலகம் இரங்கல்!

By

மும்பை: இளம் இசை அமைப்பாளர் மரணமடைந்ததை அடுத்து திரையுலக பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் இசை அமைப்பாளர்கள் சஜித் -வஜித். இரட்டை இசை அமைப்பாளர்களான இவர்கள் சகோதரர்கள்.

சல்மான் கானின் பியார் கியா தோ தர்னா க்யா படம் மூலம் இசை அமைப்பாளர் ஆன இவர்கள், பாலிவுட்டின் முன்னணி ஹீரோ படங்களுக்கு இசை அமைத்துள்ளனர்.

சிறுநீரக பிரச்னை

சிறுநீரக பிரச்னை

இதில் ஒருவரான வஜித் கான், சிறுநீரக பிரச்னை காரணமாக, மும்பை செம்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உடல்நிலை மோசமானது. இதையடுத்து இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 42. இதை இசை அமைப்பாளர் சலீம் மெர்ச்சன்ட் உறுதிப்படுத்தினார்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

அவர் கூறும்போது, அவருக்கு சிறுநீரக பிரச்னை இருந்தது. அதற்காக, சில மாதங்களுக்கு முன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சமீபத்தில் அவருக்கு சிறுநீரக தொற்று இருப்பது பற்றி தெரிய வந்ததை அடுத்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார் என்று கூறியிருந்தார்.

அக்‌ஷய்குமார்

அக்‌ஷய்குமார்

அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பும் இருந்ததாகக் கூறப்படுகிறது. வஜித் கான் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அக்‌ஷய்குமார், சங்கர் மகாதேவன், பிபாஷா பாசு, பிரீத்தி ஜிந்தா, வருண் தாவன், பிரியங்கா சோப்ரா உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிரித்தபடி இருப்பார்

சிரித்தபடி இருப்பார்

நடிகர் அனுபம் கெர் தெரிவித்துள்ள இரங்கலில், இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். எளிமையான மனிதர். எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பவர். அவர் மறைவால் வாடும் குடும்பத்தாருக்கு கடவுள் தைரியம் அளிப்பார்' என்று தெரிவித்துள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா, 'அதிர்ச்சியான செய்தி. நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒன்று வஜித் பாயின் சிரிப்பு. எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார்.

உங்கள் இசை

உங்கள் இசை

விரைவிலேயே சென்றுவிட்டார். நீங்கள் என் எண்ணங்களிலும் பிரார்த்தனையிலும் இருக்கிறீர்கள். வஜித்தின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்' என்று கூறியுள்ளார். இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் கூறும்போது, உங்கள் இசை எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

கடினமான நேரத்தில்

கடினமான நேரத்தில்

நடிகர் அக்‌ஷய்குமார் ட்விட்டரில், 'வஜித்தின் மறைவு அதிர்ச்சியும் வருத்தமும் அளித்தது. திறமையானவர். எப்போதும் சிரித்துகொண்டே இருப்பவர். இந்த கடினமான நேரத்தில் கடவுள் அவர் குடும்பத்துக்கு பலத்தை கொடுக்கட்டும் என்று தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் இர்ஃபான் கான் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். அந்த அதிர்ச்சி மறைவதற்குள் பிரபல நடிகர் ரிஷி கபூர் மரணமடைந்தார். இப்போது இளம் இசை அமைப்பாளர் உயிரிழந்திருப்பது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X