நானும் மொட்டை நீயும் மொட்டை… பாலிவுட் ஹீரோக்கள் மாறி மாறி வாழ்த்து
Recommended Video
மும்பை: அக்ஷய் குமார் ஹவுஸ்ஃபுல் 4 திரைப்படத்தில் இளவரசர் ராஜ்குமார் பாலா என்ற கதாபாத்திரத்திலும், ஆயுஷ்மான் குரானா, பாலா திரைப்படத்தில் பால்டிங் நோயால் பாதிக்கப்பட்ட பாலா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். எனவே இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை வெறும் மொட்டை மட்டும் அல்ல அவர்கள் நடிக்கும் படங்களில் அவர்களின் கதாபாத்திரங்களின் பெயர்களும் பாலா என்பதே. இந்த ஒற்றுமையை ஒத்துக்கொண்டு இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.
பாலிவுட் முன்னணி நடிகர்களான அக்ஷய் குமார் மற்றும் தேசிய விருது பெற்ற நடிகர் ஆயுஷ்மான் குரானா இருவரும் ஒருவருக்கொருவர் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து கொண்டுள்ளனர்.

அக்ஷய் குமார், தான் நடிக்கும் ஹவுஸ்ஃபுல் 4 திரைப்படத்தில் வரும் சைத்தான் கா சாலா என்ற பாடலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த பதிவிற்கு ஆயுஷ்மான் குரானா, தனது வீடியோ ஒன்றினை பதிவு செய்ததுடன் தனது வாழ்த்தினையும் அக்ஷய் குமாருக்கு தெரிவித்தார்.
அதற்கு பதிலாக அக்ஷய் குமார் ஆயுஷ்மான் குரானாவின் பாலா திரைப்படத்திற்கு தனது வாழ்த்தினை ஆல் தி பெஸ்ட் தம்பி என்றும் தெரிவித்தார். இதில் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இருவரும் மொட்டை தலையாக இருப்பது தான் என்றாலும், வேறு ஒரு ஒற்றுமையும் இவர்கள் இருவர் மத்தியிலும் உள்ளது.
அதாவது அக்ஷய் குமார் ஹவுஸ்ஃபுல் 4 திரைப்படத்தில் இளவரசர் ராஜ்குமார் பாலா என்ற கதாபாத்திரத்திலும், ஆயுஷ்மான் குரானா, பாலா திரைப்படத்தில் பால்டிங் நோயால் பாதிக்கப்பட்ட பாலா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
எனவே இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை வெறும் மொட்டை மட்டும் அல்ல அவர்கள் நடிக்கும் படங்களில் அவர்களின் கதாபாத்திரங்களின் பெயர்களும் பாலா என்பதே. இந்த ஒற்றுமையை ஒத்துக்கொண்டு இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.
அக்ஷய் குமார் ஹவுஸ்ஃபுல் 4 திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும். இப்படத்தில் ரித்தீஷ் தேஷ்முக், பாபி தியோல், கிருதி சனோன், கிருதி கர்பண்டா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஆயுஷ்மான் குரானா நடிக்கும் பாலா திரைப்படத்தில், சுப் மங்கல் சவ்தானின் திரைப்படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நடித்துள்ளார் பூமி பெட்னேகர். இப்படத்தில் யாமி கௌதம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 15 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு படங்களும் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











