இந்திய கிரிக்கெட் வீரர்களை மைதானத்தில் உற்சாகப்படுத்திய ஊர்வசி ரவுத்தேலா, அக்ஷய் குமார்!
மும்பை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை டி20 போட்டியை மைதானத்தில் கண்டு ரசித்து இந்திய வீரர்களை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் பிரீத்தி ஜிந்தா உள்ளிட்ட பிரபலங்கள் உற்சாகப்படுத்தினர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து இந்திய அணியை பேட் செய்ய பணித்தது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளனர்.

கோலி வெறித்தனம்
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, கே.எல். ராகுல் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் ரன்களை குவிக்க முடியாமல் சொதப்பிய நிலையில், கேப்டன் கோலி வெறித்தனமாக விளையாடி அரைசதம் கடந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த பாடுபட்டார்.

பிரபலங்கள் ஆர்வம்
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் எந்தளவுக்கு ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனரோ அதே அளவுக்கு பிரபலங்களும் ஆர்வத்துடன் இந்த போட்டியை கண்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் ட்வீட்களும் பறக்கின்றன சில பாலிவுட் நட்சத்திரங்கள் நேரடியாகவே மைதானத்திற்கே சென்று ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

உற்சாகப்படுத்திய ஊர்வசி
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அருள் நடித்து வரும் பிரம்மாண்ட படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு சமீபத்தில் கோல்டன் விசா துபாய் அரசால் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்திய அணியை தேசிய கொடி ஏந்தி உற்சாகப்படுத்தினார்.

ரிஷப் ஆடும் போது
அடுத்தடுத்து ரிஷப் பந்த் இரண்டு சிக்ஸர்களை விளாச பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஸ்டேடியத்தில் துள்ளிக் குதித்து ஆடியதை பார்த்த நெட்டிசன்கள் ஊர்வசி ரவுத்தேலா ஹாஷ்டேக்கை டிரெண்டாக்கி ஏகப்பட்ட ட்வீட்களையும் மீம்களையும் போட்டு வருகின்றனர்.

அக்ஷய் குமாரும் ஸ்டேடியத்தில்
ஊர்வசி ரவுத்தேலாவை பல முறை ஃபோகஸ் பண்ண கேமராமேன் பாலிவுட்டின் மெகா ஸ்டார் அக்ஷய் குமாரும் போட்டியை நேரில் கண்டு ரசித்ததை அறிந்து கொண்டு அவர் பக்கமும் சில நொடிகள் கேமராவை திருப்ப நெட்டிசன்கள் அந்த ஸ்க்ரீன் ஷாட்டை ஷேர் செய்து வருகின்றனர். மேலும், நடிகை பிரீத்தி ஜிந்த உள்ளிட்ட பிரபலங்களும் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர். இந்தியா வெற்றியடைய வேண்டும் என பல கோடி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











