வாவ்.. பர்த்டே ஸ்பெஷல்... புதிய பட அறிவிப்பை வெளியிட்ட ரஜினி வில்லன்... ரசிகர்கள் ஹேப்பி!

மன்னர் பிருத்விராஜ் சவுகானின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் அக்ஷய் குமார்.

சென்னை: மன்னர் பிருத்விராஜ் சவுகானின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.

டெல்லியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தவர் மன்னர் பிருத்வி ராஜ் சவுகான். கன்னோசி நாட்டின் மன்னன் செயச்சந்திர ரத்தோடின் மகளான சம்யுக்தாவுடன் பிருத்விராஜ் கொண்ட காதல் வட இந்தியாவில் புகழ்பெற்ற ஒரு காதல் கதை ஆகும். பிருத்விராஜின் அரசவைப் புலவரும், அவரது நண்பருமான சந்த் பார்தாய் என்பவர் எழுதிய பிருத்விராஜ் ராசோ என்னும் காவியத்தின் கருப்பொருளும் இதுவே.

Akshay Kumar announces a bio pic of the great warrior Prithviraj Chauhan

பிருத்விராஜ் சவுகான் தான் டெல்லியை ஆண்ட கடைசிக்கு முந்தைய இந்து அரசர். இவருக்கு பிறகு முகலாயர்கள் டெல்லியை கைப்பற்றினர். இப்படிப்பட்ட அருமை பெருமைகள் கொண்ட பிருத்விராஜ் சவுகானின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படுகிறது.

பிருத்விராஜ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அக்ஷய் குமார். அவரது பிறந்தநாளையொட்டி, இந்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்ஷய் குமார் தமிழில் ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த மிஷன் மங்கள் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. போர்ப்ஸ் வெளியிட்ட அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில், முதல் 10 இடங்களில் இடம் பிடித்த ஒரே இந்திய நடிகர் அக்ஷய் குமார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X