படப்பிடிப்பை நிறுத்திய அக்ஷய் குமார், படத்தில் இருந்து விலகிய இயக்குனர்: காரணம் 'மீ டூ'
Recommended Video

மும்பை: பாலியல் புகாரில் சிக்கிய இயக்குனர் சஜித் கான் படத்தில் நடிக்க மறுத்து படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார் அக்ஷய் குமார்.
சஜித் கான் இயக்கி வரும் ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் நடித்து வந்தார் அக்ஷய் குமார். அந்த படத்தில் தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் தெரிவித்த நானா படேகரும் உள்ளார்.
தனுஸ்ரீ தத்தா சொல்வது எல்லாம் பொய் என்று கூறிவிட்டு நானா படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

சஜித் கான்
இயக்குனர் சஜித் கான் மீது இரண்டு நடிகைகள், பெண் பத்திரிகையாளர் என்று 3 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் சஜித் நடந்து கொண்ட விதத்தை விவரிக்க முடியாது. அந்த அந்த அளவுக்கு கீழ்த்தரமாக நடந்துள்ளார். இந்த புகார் எழுந்த நிலையில் அக்ஷய் குமார் முக்கிய முடிவு எடுத்துள்ளார்.

அக்ஷய் குமார்
இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய அக்ஷய் குமார் சஜித், நானா மீதான பாலியல் புகார்கள் குறித்து அறிந்த வேதனைப்பட்டுள்ளார். விசாரணை முடியும் வரை ஹவுஸ்ஃபுல் 4 படப்பிடிப்பை நிறுத்துமாறு தயாரிப்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார். தவறு செய்ததாக நிரூபிக்கப்பட்டவர்களுடன் நான் பணியாற்ற மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் அக்ஷய் குமார்.
இயக்குனர்
அக்ஷய் குமார் படப்பிடிப்பை நிறுத்தக் கோரிய வேகத்தில் படத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சஜித் கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உண்மையை நிரூபிக்கும் வரை அந்த பொறுப்பை திரும்ப ஏற்க மாட்டாராம் அவர். உண்மை வெளியே வரும் வரை எந்த கருத்தையும் பரப்ப வேண்டாம் என்று மீடியாவை கேட்டுக் கொண்டுள்ளார்.

நிறுத்தியது இல்லை
அக்ஷய் குமார் தனது 28 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் ஒரு முறை கூட படப்பிடிப்பை நிறுத்தியது இல்லை. தற்போது தான் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார். சஜித் நாதியத்வாலா தயாரிக்கும் ஹவுஸ்ஃபுல் 4 படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. பெரும்பாலான காட்சிகள் லண்டன் மற்றும் ஜெய்லசல்மரில் படமாக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











