அடேங்கப்பா...தனுஷ் படத்தில் நடிக்க, அக்ஷய் குமாருக்கு இவ்ளோ கோடி சம்பளமா?
சென்னை: தனுஷ் நடிக்கும் படத்துக்காக, நடிகர் அக்ஷய்குமார் ரூ. 120 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியில் 'தனு வெட்ஸ் மனு' உட்பட சில படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய், தனுஷ் நடித்த ரான்ஜ்னா என்ற இந்தி படத்தையும் இயக்கி இருந்தார். இதையடுத்து தனுஷ் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.
இதில் சாரா அலிகான், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். காதல் கதையை கொண்ட படமான இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

ரூ.120 கோடி
இந்தப் படத்தில் நடிக்க அக்ஷய்குமார் ரூ.120 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் தொடர்ந்து வசூலை வாரிக் குவித்து வருகின்றன. கடந்த மாதம் வெளியான குட் நியூஸ் படமும் அதற்கு முன் வெளியான படங்களும் வசூலை குவித்துள்ளது.

கடும் போட்டி
அவரது படங்களின் டிஜிட்டல் மற்றும் சேனல் உரிமங்களை பெறவும் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் அவரது சம்பளமும் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் நடிக்க அவருக்கு 120 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜேம்ஸ் காஸ்மோ
அக்ஷய் குமார் நடித்து டிசம்பம் மாதம் கடைசியில் வெளியான குட்நியூஸ் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ள நிலையில், இந்த வருடம் 3 படங்கள் வெளியாக உள்ளன. ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள சூரியவன்ஷி, காஞ்சனா ரீமேக்கான லஷ்மி பாம் உட்பட 3 படங்கள் வெளியாக இருக்கின்றன.

ஜேம்ஸ் காஸ்மோ
நடிகர் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துவருகின்றன. இதில் அவர் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடிக்கிறார்.
Recommended Video

கர்ணன்
அடுத்து, பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் 'கர்ணன்' படத்தில் நடித்து வருகிறார். இதை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் திருநெல்வேலியில் பிரமாண்ட செட் அமைத்து நடந்துவருகிறது. இந்தப் படங்களை முடித்துவிட்டு அவர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் இந்திப் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











