இந்திய ராணுவத்தை யாரும் இப்படி அவமதிக்கக் கூடாது.. ரிச்சா சத்தாவுக்கு அக்ஷய் குமார் கண்டனம்!
மும்பை: இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் ட்வீட் போட்ட பாலிவுட் நடிகை ரிச்சா சத்தாவுக்கு அக்ஷய் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'கேங்ஸ் ஆஃப் வசிப்பூர்', 'ஃபுக்ரே', 'கோலியோன் கி ராஸ்லீலா ராம் லீலா', ஷகீலா உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிச்சா சதா.
சமீபத்தில் இந்திய ராணுவம் குறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டுக்கு பாலிவுட் ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றன.

ஷகீலா பட ஹீரோயின்
'கேங்ஸ் ஆஃப் வசிப்பூர்', 'ஃபுக்ரே', 'கோலியோன் கி ராஸ்லீலா ராம் லீலா', ஷகீலா உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிச்சா சதா. 35 வயது நடிகையான ரிச்சா சத்தா கடந்த 2020ம் ஆண்டு ஷகீலா பயோபிக்கில் நடித்து இருந்தார். ஆடையின்றி ஆபரணங்களால் தனது மேனியை மறைத்தபடி வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அரசியல் படங்கள்
கடந்த ஆண்டு ரிச்சா சத்தா நடிப்பில் மேடம் சீஃப் மினிஸ்டர் மற்றும் லாகூர் கான்ஃபிடென்ஷியல் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அரசியல் கருத்துக்கள் நிறைந்த படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நிலையில், நடிகை ரிச்சா சத்தா இந்திய ராணுவம் குறித்து போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கமாண்டர் பதிவு
பாலிவுட் ஹீரோயின் ரிச்சா சதா. சமீபத்தில் ராணுவ கமாண்டர் கூறியதை ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார். அந்தப் பதிவில், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானிடமிருந்து முழுமையாகத் திரும்பப் பெற நாங்கள் தயாராக உள்ளோம். அரசின் உத்தரவிற்காக காத்திருக்கிறோம். இந்த ஆபரேஷனை விரைந்து முடிப்போம். போர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு எங்களது பதில் வேறு மாதிரி இருக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தது.

ரிச்சா சத்தா கிண்டல்
இந்தப் பதிவிற்கு நடிகை ரிச்சா சதா, "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என கமெண்ட் செய்திருந்தார். இந்த கமெண்டை பார்த்த நெட்டிசன்கள் அவர் ராணுவத்தையும் 2020ல் சீனப் படைகளுடன் போரிட்டு உயிர்த் தியாகம் செய்த வீரர்களையும் அவமதித்ததாகக் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து நடிகை ரிச்சா சதாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அக்ஷய் குமார் கண்டனம்
நமது ஆயுதப்படையை இப்படி மோசமாக விமர்சிப்பதை பார்த்து மனம் வேதனைப்படுகிறது என நடிகர் அக்ஷய் குமார் ரிச்சா சத்தாவின் ட்வீட்டுக்கு கீழ் பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்திய ராணுவத்தை விமர்சிக்கும் அளவுக்கு பாலிவுட் நடிகைகள் மாறிவிட்டார்களா? என நெட்டிசன்கள் பாய்காட் பாலிவுட் ஹாஷ்டேக்கை மீண்டும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மன்னிப்பு கேட்ட நடிகை
இந்த விவகாரம் பெரிதானதும் உடனடியாக தனது ட்வீட்டுக்கு நடிகை ரிச்சா சத்தா மன்னிப்பு கேட்டுள்ளார். என் குடும்பத்திலும் ராணுவத்தில் ஆட்கள் உள்ளனர். நான் போட்ட பதிவு யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், ரிச்சா சத்தாவின் பதிவுக்கு எதிராக போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











