twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரகாஷ் ராஜுக்கு இருக்கும் தைரியம் ரஜினி வில்லனுக்கு இல்லையே

    By Siva
    |

    Recommended Video

    மோடியை தாக்கும் பிரகாஷ் ராஜின் பேட்டி! - வீடியோ

    மும்பை: பெட்ரோல் விலை உயர்வு குறித்து தான் போட்ட பழைய ட்வீட்டை நெட்டிசன்கள் தேடிக் கண்டுபிடித்து ஷேர் செய்ததை பார்த்த அக்ஷய் குமார் அதை நீக்கிவிட்டார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதே நிலை தொடர்ந்தால் அனைவரும் சைக்கிளில் தான் பயணம் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இந்த விலை உயர்வால் நாங்கள் அவதிப்படுவது மத்திய அரசுக்கு தெரியவில்லையா என்று மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

     அக்ஷய் குமார்

    அக்ஷய் குமார்

    மீண்டும் பெட்ரோல் விலை உயரப்போகிறது என்று தெரிய வந்துள்ளது. அதனால் அனைவரும் தங்களின் சைக்கிளை சுத்தம் செய்யுங்கள் என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 2012ம் ஆண்டு அதாவது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது ட்வீட்டினார்.

    மோடி

    மோடி

    தற்போது மோடி அரசில் பெட்ரோல் விலை கண்டமேனிக்கு உயர்த்தப்பட்டு வரும் நிலையில் நெட்டிசன்கள் அக்ஷய் குமாரின் ட்வீட்டை கண்டுபிடித்து ஷேர் செய்தனர்.

    ட்வீட்

    ட்வீட்

    நெட்டிசன்கள் தனது பழைய ட்வீட்டை தேடிக் கண்டுபிடித்ததை பார்த்த அக்ஷய் குமார் அவசர அவசரமாக அதை நீக்கிவிட்டார். மத்திய அரசுக்கு எதிராக இருக்கிறோம் என்று யாரும் விமர்சித்துவிடுவார்களோ என்ற பயத்தில் நீக்கிவிட்டாரா?

    மன்மோகன் சிங்

    அக்ஷய் குமார் மட்டும் அல்ல பாலிவுட் பிரபலங்கள் பலரும் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தனர். மோடி பிரதமர் ஆனதும் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளனர். ஆனால் பிரகாஷ் ராஜோ மோடி அரசை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இதனால் தன்னை பாலிவுட்காரர்கள் ஒதுக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    கேள்வி

    காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்த பாலிவுட் பிரபலங்களின் ட்வீட்டுகளை தேடிக் கண்டுபிடித்து எடுத்து தற்போது ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    English summary
    Bollywood actor Akshay Kumar has deleted an old tweet about petrol price hike after netizens found out that and shared as it is very much applicable now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X