கொரோனா நிவாரண உதவிக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்த அக்ஷய் குமார்

மும்பை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தாராள குணம் மற்றும் உதவும் மனப்பான்மை கொண்டவர் என்பது பலரும் அறிந்ததே. சமீபத்தில் இவர் கொரோனா நிவாரண பணிக்காக ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர் நடத்தி வரும் என்ஜிஓ.,விற்கு தான் இந்த நிவாரண தொகையை அக்ஷய் குமார் அளித்துள்ளார்.

இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கவுதம் காம்பிர், ஒவ்வொரு முறையும் கிடைக்கும் உதவி புதிய நம்பிக்கையை தருகிறது. தேவைப்படுபவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி, ஆக்சிஜன் வழங்குவதற்காக கவுதம் காம்பிரின் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்த அக்ஷய் குமாருக்கு பலப்பல நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

 Akshay Kumar donates Rs 1 crore for Covid-19 relief work

இதற்கு பதிலளித்துள்ள அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், இப்போது இருப்பது மிக கடினமான நேரம், கவுதம் காம்பிர். என்னால் உதவி முடிந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நெரக்கடியில் இருந்து விரைவில் மீண்டு வர விரும்பிகிறேன். பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இம்மாத துவக்கத்தில் அக்ஷய் குமாருக்கு கொரானா தொற்று உறதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவரகளின் ஆலோசனைப்படி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பையில் தற்போது நடித்து வரும் ராம் சேது படத்தின் சூட்டிங்கில் இருந்த போது அக்ஷய் குமாருக்கு நோய் தொற்று ஏற்பட்டது.

 Akshay Kumar donates Rs 1 crore for Covid-19 relief work

இதனை ட்விட்டரில் தெரிவித்த அக்ஷய் குமார், தான் விரைவில் மீண்டும் வருவேன் என நம்பிக்கை தெரிவித்தார். அததைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு அக்ஷயின் மனைவி ட்விங்கிள் கண்ணா, தனது கணவர் வீடு திரும்பி விட்டதாக அறிவித்தார்.

அக்ஷய் குமாருடன் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்ட ட்விங்கிள் கண்ணா, பாதுகாப்பாக, நல்ல முறையில் திரும்பி வந்து விட்டார். அனைத்தும் நன்மைக்கே என குறிப்பிட்டிருந்தார். அக்ஷய் குமார் தற்போது ரோஹித் ஷெட்டி இயக்கும் சூர்யவம்சம் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து பச்சன் பாண்டே, ராம் சேது, பெல் பாட்டம், ப்ருத்விராஜ் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X