twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஃபேக் பாக்ஸ் ஆஃபிஸ் பிரச்சனை.. ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்த அக்‌ஷய்!

    அக்‌ஷய் குமார் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான ஹவுஸ்ஃபுல் 4 படத்திற்கும் ஃபேக் பாக்ஸ் ஆஃபிஸ் பிரச்சனை கிளம்பியுள்ளது. இதுகுறித்து கூலாக ட்விட்டரில் பதிலளித்துள்ளார் அக்‌ஷய் குமார்.

    |

    மும்பை: பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் இதுபோன்ற போலியான வசூல் விவரங்கள் வெளியாவது வழக்கம்.

    3 நாட்களில் இத்தனை கோடி வசூல் என்ற ரீதியில் தகவல்கள் வெளியாகும். ஆனால், தயாரிப்பு நிறுவனமோ, இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் வெளியிடாது.

    இதுபோன்ற பிரச்சனை அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள ஹவுஸ்ஃபுல் 4 திரைப்படத்திற்கும் தற்போது எழுந்துள்ளது.

    ரஜினியின் முதல் காதலி யார் தெரியுமா?.. மொத்த ரகசியத்தையும் உடைத்த பிரபல வில்லன் நடிகர்!ரஜினியின் முதல் காதலி யார் தெரியுமா?.. மொத்த ரகசியத்தையும் உடைத்த பிரபல வில்லன் நடிகர்!

    ஹவுஸ்ஃபுல் 4

    ஹவுஸ்ஃபுல் 4

    பாலிவுட் இயக்குநர் ஃபர்கத் சம்ஜி இயக்கத்தில் 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் ஹவுஸ்ஃபுல் 4. இந்த படத்தில் அக்‌ஷய்குமார், க்ரித்தி சனோன், ரிதேஷ் தேஷ்முக், பாபி தியோல் மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 1419ம் ஆண்டு மற்றும் 2019 ஆண்டு என 600 ஆண்டுகால வரலாற்றை ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் காமெடியாக எடுத்துள்ளனர்.

    காமெடி காஞ்சனா

    காமெடி காஞ்சனா

    தமிழில் காஞ்சனா படங்கள் 4 பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், பாலிவுட்டில் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஹவுஸ்ஃபுல் படங்களின் பாகங்கள் வெளியாகி வருகின்றன. சஜித் கான் இயக்கத்தில் ஹவுஸ்ஃபுல் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் வெளியாகின. மூன்றாம் பாகத்தை சஜித் ஃபர்கத் என்பவரும் தற்போது வெளியாகியுள்ள 4ம் பாகத்தை ஃபர்கத் சம்ஜி என்பவரும் இயக்கியுள்ளனர். கமர்ஷியல் காமெடி படத்திற்கு எந்தவொரு லாஜிக்கும் தேவையில்லை என்பதை 2010ம் ஆண்டு முதலே பின்பற்றி வருகிறது ஹவுஸ்ஃபுல் சிரீஸ் படங்கள்.

    ஃபேக் பாக்ஸ் ஆபிஸ்

    ஃபேக் பாக்ஸ் ஆபிஸ்

    பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவருவது என்றாலே கூடவே ஃபேக் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்களும் வெளியாகின்றன. சில சமயங்களில் உண்மையான வசூல் விவரங்கள் வெளிவந்தாலும், தயாரிப்பு தரப்பு அறிவிக்காத நிலையில், அதுவும் போலியான வசூல் நிலவரம் என ஹேட்டர்ஸ்கள் கிளப்பி விடுவார்கள். அப்படி, தீபாவளிக்கு வெளியான அக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் படம் படுதோல்வி அடைந்துள்ளது என்றும், அதன் வசூல் நிலவரங்கள் போலியானவை என்றும் பரப்பப்பட்டு வருகிறது.

    அக்‌ஷய் ரியாக்‌ஷன்

    ஹவுஸ்ஃபுல் 4 படத்தின் நாயகன் அக்‌ஷய் குமார், இந்த ஃபேக் பாக்ஸ் ஆபிஸ் பிரச்சனைக்கு கூலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். எங்களுடன் படத்தை பார்த்து சிரித்து மகிழ்ந்த ரசிகர்களுக்கு நன்றி. வெறுப்பவர்களை அன்பு ஒன்றால் தான் தோற்கடிக்க முடியும். ரசிகர்களின் அன்புக்கு நன்றி என பதிலடி கொடுத்துள்ளார்.

    தீபாவளியை முன்னிட்டு வெளியான ஹவுஸ்ஃபுல் 4 திரைப்படம் இதுவரை 4 நாட்களில் 85 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Read more about: akshay kumar
    English summary
    The film which has been in the limelight since its inception saw itself in top trends on social media as 'Fake Housefull figures' and 'Paid Negativity on HF4'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X