தனுஷோட சூப்பர் டேலண்ட பார்த்து வியப்பா இருக்கு... தனுஷை பாராட்டிய அக்ஷய்!

மும்பை : நடிகர் தனுஷ், அக்ஷய்குமார், சாரா அலி கான் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்தியில் அட்ராங்கி ரே படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் புரமோஷனுக்காக தற்போது மும்பையில் தனுஷ் உள்ளார்.

இந்நிலையில் தனுஷின் நடிப்பை பார்த்து மிகவும் வியப்பாக உள்ளதாக படத்தில் அவருடன் நடித்து வரும் அக்ஷய்குமார் நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் தனுஷ்

பாலிவுட்டில் தனுஷ்

ராஞ்சனா படத்தின் வெற்றிக்கு பிறகு ஆனந்த் எல் ராய் உடன் தனுஷ் மீண்டும் அட்ராங்கி ரே படத்தின் மூலம் இணைந்துள்ளார். படத்தில் தனுஷுடன் அக்ஷய் குமார், சாரா அலி கான் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பூஷன்குமார் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்திற்கு ஹிமன்ஷு ஷர்மா கதை எழுதியுள்ளார்.

ஏஆர் ரகுமான் இசை

ஏஆர் ரகுமான் இசை

படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த மாத இறுதியில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக தனுஷ் மும்பையில் உள்ளார். அவரது சிறப்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தனுஷ் -அக்ஷய் சந்திப்பு

தனுஷ் -அக்ஷய் சந்திப்பு

இந்நிலையில் இந்த பிரமோஷனையொட்டி அக்ஷய்குமார் மற்றும் தனுஷ் இருவரும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போது அக்ஷயிடம் தனுஷ் அவரது சிறப்பான நடிப்பை தொடர்ந்து பார்த்து வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கொருவர் பாராட்டு

ஒருவருக்கொருவர் பாராட்டு

இதற்கு பதிலளித்த அக்ஷய்குமார் தனுஷின் சிறப்பான திறமையை தான் தொடர்ந்து பார்த்து வியப்படைந்து வருவதாக தெரிவித்ததாக அக்ஷய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Jail Movie Public Review | GV Prakash | Vasantha Balan | Filmibeat Tamil
சிறப்பான புகைப்படம்

சிறப்பான புகைப்படம்

இதையடுத்து தாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டதாகவும் அதனால் தாங்கள் எடுத்த புகைப்படம் சிறப்பாக அமைந்ததாகவும் அக்ஷய்குமார் குறும்புடன் பதிவிட்டுள்ளார். மேலும் தாங்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X