மோடி சொன்னார்னு ஊரை எல்லாம் ஓட்டு போடச் சொன்ன நடிகர் ஓட்டு போடலப்பா

By Siva

மும்பை: ஊரை எல்லாம் ஓட்டு போடுமாறு வலியுறுத்திய பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இன்று வாக்களிக்கவில்லை.

லோக்சபா தேர்தலின் 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் வாக்களித்துவிட்டு மை வைத்த விரலை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

சில பிரபலங்களின் விரலில் மையையே காணோம். அது தனிக்கதை.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

வாக்களிக்குமாறு மக்களை ஊக்குவியுங்கள் என்று மோடி போட்ட ட்வீட்டை பார்த்து அக்ஷய் குமார் மக்களை வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் அவர் இன்று ஓட்டு போடவில்லை. காரணம் அவர் கனடா குடிமகன்.

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

என்ன அக்கி சார், எங்களை எல்லாம் ஓட்டு போடச் சொல்லிவிட்டு நீங்கள் இப்படி வெளிநாட்டுக்காரராக இருக்கிறீர்களே என்று நெட்டிசன்கள் அக்ஷய் குமாரை கலாய்த்துள்ளனர்.

ஆலியா பட்

ஆலியா பட்

பாலிவுட் நடிகை ஆலியா பட் இங்கிலாந்து குடியுரிமை உள்ளவர். அதனால் அவராலும் இந்தியாவில் வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் அவரும் வாக்களிக்க முடியாது.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இங்கிலாந்து குடிமகள். அதனால் அவர் இன்று வாக்களிக்கவில்லை. மேலும் கனடாவை சேர்ந்தவர் என்பதால் சன்னி லியோனாலும் வாக்களிக்க முடியாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X