அக்‌ஷய் குமாரை சண்டைக்கு அழைத்த அண்டர்டேக்கர்.. நம்ம ஆளு சொன்ன பதில் தான் வெறித்தனம்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை WWE சாம்பியனான அண்டர்டேக்கர் சண்டைக்கு அழைத்துள்ளார்.

சமீபத்தில் தனது பாலிவுட் படமான கில்லாடியோன் கா கில்லாடி படத்தின் 25ம் ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடினார் நடிகர் அக்‌ஷய் குமார்.

அந்த படத்தில் அண்டர் டேக்கரை அடித்து வீழ்த்துவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்று இருக்கும்.

25 ஆண்டுகள்

25 ஆண்டுகள்

இயக்குநர் உமேஷ் மெஹ்ரா இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான கிலாடியோன் கா கில்லாடி படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்திருந்தார். அந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு சமீபத்தில் அது தொடர்பான ட்வீட் ஒன்றை நடிகர் அக்‌ஷய் குமார் பதிவிட்டு இருந்தார்.

அண்டர்டேக்கரை வீழ்த்தியவன்

அண்டர்டேக்கரை வீழ்த்தியவன்

அவர் பதிவிட்டு இருந்த ட்வீட்டில் இதுவரை டெட்மேன் அண்டர்டேக்கரை வீழ்த்தியவர்கள் யாரெல்லாம் கையை தூக்குங்க என போட்டிருந்தது. பிராக் லெஸ்னர், டிரிபிள் எச், ரோமன் ரெயின்ஸை தொடர்ந்து அக்‌ஷய் குமாரின் புகைப்படமும் இருக்க அந்த ட்வீட் செம வைரலானது.

சண்டைக்கு வா

சண்டைக்கு வா

அது எந்த அளவுக்கு வைரலானது என்றால் நிஜ அண்டர்டேக்கருக்கே இந்த விஷயம் தெரியும் அளவுக்கு, உடனடியாக அண்டர்டேக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் எப்போ நிஜமான சண்டைக்கு வரீங்க அக்‌ஷய் குமார் என பொசுக்கென கேட்டுள்ளார் அண்டர்டேக்கர்.

அக்‌ஷய் குமார் பதில்

அக்‌ஷய் குமார் பதில்

அண்டர்டேக்கரின் இந்த ட்வீட்டை பார்த்து ஜெர்க்கான அக்‌ஷய் குமார், கொஞ்சம் இருங்க, என் இன்சுரன்ஸ் கம்பெனியிடம் பேசிவிட்டு சண்டைக்கு வருகிறேன் என பதில் கொடுத்து ரசிகர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தி உள்ளார். அக்‌ஷய் குமாரின் இந்த பதிலை பார்த்து அண்டர்டேக்கரே அசந்து போயுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X