»   »  ரஜினி வில்லனுக்கு ஒரு நாள் சம்பளம் ஒரு கோடியாமே...!

ரஜினி வில்லனுக்கு ஒரு நாள் சம்பளம் ஒரு கோடியாமே...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிப்பட நாயகனாக வலம் வரும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார், தனது அடுத்த படத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் என்ற கணக்கில் ரூ. 70 கோடி சம்பளமாக பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அக்‌ஷய்குமார். இவரது படம் குறைந்த பட்ச வசூலையாவது கொடுத்து விடும் என்பது தயாரிப்பாளர்களின் நம்பிக்கை.

akshay

இந்த வருடம் இவர் நடித்து வெளிவந்த 3 படங்களும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், அடுத்ததாக அவர் ஜாலி எல்.எல்.பி- 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் 65 நாட்கள் நடைபெற இருக்கிறதாம். டப்பிங்கோடு சேர்த்து இப்படத்திற்காக 70 நாட்கள் கால்ஷீட் தந்துள்ளார் அக்‌ஷய். எனவே, நாளொன்றுக்கு ரூ. 1 கோடி வீதம் இந்த 70 நாட்களுக்கு ரூ. 70 கோடி சம்பளமாக அவர் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழிலும் சங்கர் இயக்கத்தில் ரஜினிக்கு வில்லனாக எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படத்தில் நடித்து வருகிறார் அக்‌ஷய். இப்படத்தின் ரிலீசுக்குப் பிறகு தமிழிலும் முன்னணி வில்லனாக அக்‌ஷய் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாலி எல்.எல்.பி முதல் பாகம் தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடித்து மனிதன் என்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to a report actor Akshay kumar is being paid Rs 1 crore per day for director Subhash Kapoor's upcoming film Jolly LLB 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil