இந்திக்கும் போகும் சூரரைப் போற்று... யார் ஹீரோன்னு பாருங்க
மும்பை : நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2020ல் வெளியான படம் சூரரைப் போற்று.
உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படத்தை சுதா கொங்குரா இயக்கியிருந்தார்.
இந்நிலையில் தற்போது படம் பாலிவுட்டிலும் உருவாக உள்ளது.படத்தை சுதா கொங்குராவே இயக்கவுள்ளார்.

சூரரைப் போற்று படம்
நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாகரன், பரேஷ் ராவல், ஊர்வசி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2020ல் வெளியான படம் சூரரைப் போற்று. டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையின் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டது.

சூர்யா நடிப்பு + தயாரிப்பு
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சிக்யா என்டர்டெயின்மெண்ட்டுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருந்தது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். படம் நேரடியாக ஓடிடியில் வெளியான போதிலும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக அமைந்தது.

சிறப்பான பயோபிக் படம்
தமிழில் வெளியான பயோபிக் படங்களில் சிறப்பான வகையில் இந்தப் படம் அமைந்திருந்தது. கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு உணர்வுபூர்வமான கதையை ரசிகர்கள் விரும்பும் வகையில் உருவாக்கியிருந்தார் சுதா கொங்குரா. சிறப்பான மற்றும் எளிமையான திரைக்கதையுடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருந்தார்.

நனவாகும் இளைஞனின் கனவு
குறைந்த விலையில் விமான சேவையை தர வேண்டும் என்ற ஒரு இளைஞனின் கனவை எவ்வாறு நனவாகிறது என்பதை இந்தப் படம் வெளிப்படுத்தியிருந்தது. அதற்கு ஏற்படும் முட்டுக்கட்டைகளை எவ்வாறு தகர்த்து வெற்றியை பெறுகிறான் என்பதையும் இந்தப் படம் காட்டியிருந்தது. சூர்யா தனது நடிப்பால் இந்தக்கதைக்கு பலத்தை சேர்த்திருந்தார்.

இந்தியில் சூரரைப் போற்று
இந்தப் படம் பலதரப்பினராலும் ரசிகர்களாலும் பாராட்டுக்கு உள்ளான நிலையில் தற்போது படம் இந்திக்கும் போகிறது. இதை படத்தின் வில்லன் பரேஷ் ராவல் உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் அக்ஷய் குமார் இந்தப் படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார்.

சுதா கொங்குரா இயக்கம்
படத்தை இந்தியிலும் சுதா கொங்குராவே இயக்கவுள்ள நிலையில், சூரரைப் போற்று படத்தில் நடித்த அதே வில்லன் கேரக்டரில் பரேஷ் ராவல், இந்தியிலும் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











