Don't Miss!
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- News
முதல்வர் ஸ்டாலின் மிக நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.. அவரை பாராட்டுகிறேன்.. கே.எஸ்.அழகிரி பேட்டி!
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
சமந்தாவை அலேக்காக தூக்கிய அக்ஷய் குமார்.. எப்படியெல்லாம் வளைச்சு வளைச்சு சுத்துறாரு பாருங்க!
மும்பை: நடிகை சமந்தா பாலிவுட்டில் விரைவில் அக்ஷய் குமார் படத்தில் தான் அறிமுகம் ஆகப் போகிறார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது கரண் ஜோஹரின் இந்த காபி வித் சீசன் 7ன் புதிய புரமோ.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, பாலிவுட், ஹாலிவுட் என தனது வளர்ச்சிக்கான பாதையை தேர்வு செய்து அடுத்த லெவலுக்கு சென்று கொண்டிருக்கிறார்.
காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்ட ஹாட்டான புகைப்படங்கள் வெளியான நிலையில், தற்போது அதன் புரமோ வீடியோ கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து ரிடர்ன்.. கோட்டு சூட்டுடன் ஜம்முன்னு வந்து இறங்கிய இளையராஜா!

சமந்தாவை அலேக்காக தூக்கிய அக்ஷய்
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமாரும் நடிகை சமந்தாவும் கரண் ஜோஹரின் பிரபலமான காபி வித் கரண் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டனர். விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அந்த நிகழ்ச்சி வெளியாக காத்திருக்கிறது. அதன் புரமோவை தற்போது கரண் ஜோஹர் ஷேர் செய்துள்ளார். அதில், நடிகர் அக்ஷய் குமார் செட்டுக்குள் வரும் போதே, சமந்தாவை அலேக்காக தூக்கிக் கொண்டு வரும் வீடியோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

செம ஹாட் உடையில்
காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிகப்பு கலரில் முன்புறம் ஜன்னல் வைத்த டாப் மற்றும் பிங்க் கலர் பேன்ட் அணிந்து கொண்டு செம ஹாட்டாக சமந்தா பங்கேற்றுள்ளார். நடிகர் அக்ஷய் குமாருடன் பரம நெருக்கம் காட்டி நிகழ்ச்சி முழுவதும் சமந்தா செய்துள்ள சேட்டைகளை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். என்ன இருவரும் இந்த அளவுக்கு நெருக்கம் காட்டி வருகின்றனரே என கமெண்ட் பக்கத்தில் பலரும் கதறி உள்ளனர்.

அக்ஷய் குமார் ஜோடி
பாலிவுட்டில் நடிகை சமந்தா அக்ஷய் குமாருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்றும் அதற்கான புரமோஷன் நிகழ்ச்சியாகவே காபி வித் கரண் ஷோவில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டிருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தி ஃபேமிலி மேன் சீசன் 2 வெப்சீரிஸில் ராஜி கதாபாத்திரத்தில் செம போல்டாக நடித்து பாலிவுட் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சமந்தா, அக்ஷய் குமார் படம் மூலம் பாலிவுட்டில் மிகப்பெரிய என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார்.
Recommended Video

கண்டபடி சுற்றும் அக்ஷய்
சமந்தாவை ஒரு பொம்மை போல கண்டபடி தூக்கி சுற்றி அவருடன் நடனம் ஆடியுள்ள புரமோ வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. ஷாருக்கான் படத்தில் நயன்தாரா அறிமுகமாகவுள்ள நிலையில், அதற்கு போட்டியாக அக்ஷய் குமார் படத்தில் சமந்தா அறிமுகமாக போகிறாராம். ஆயுஷ்மான் குரானா படத்திலும் சமந்தா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
|
அன்ஹேப்பி மேரேஜ்
இந்த ஷோவில் தான் அன்ஹேப்பி மேரேஜ்களுக்கு நீங்க தான் காரணம் கரண் ஜோஹர் என நடிகை சமந்தா குற்றாச்சாட்டு முன் வைத்ததாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் வியாழக்கிழமை ஒளிபரப்பாகவுள்ள அக்ஷய் குமார், சமந்தா ஃபன் சாட் ஷோவின் புரமோ வீடியோ டிரெண்டாகி வருகிறது.