ஒரே கையால் ஹெலிகாஃப்டரை நிறுத்திய அக்ஷய்... அசந்து நின்ற மிருணாள் தாகூர்...இதெல்லாம் ஓவரா இல்லையா?
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் தற்போது செல்ஃபி என்ற படத்தில் நடித்துள்ளார்.
ராஜ் மேத்தா இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அக்ஷய் குமாருடன் மிருணாள் தாகூர், நுஷ்ரத் பருச்சா, இம்ரான் ஹாஷ்மி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், செஃல்பி படத்தில் வெளியான முதல் பாடலில் அக்ஷய் குமாருடன் மிருணாள் தாகூர் போட்ட குத்தாட்டம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அக்ஷய் குமாரின் செல்ஃபி
பாலிவுட் டாப் ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் குமார் நடிப்பில் கடந்தாண்டு மட்டும் 5 படங்கள் வெளியாகின. பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ், ரக்ஷாபந்தன், கட்புட்லி, ராம் சேது, ரக்ஷா பந்தன் ஆகிய படங்கள் வெளியான போதும் எதுவுமே ஹிட் கொடுக்கவில்லை. முக்கியமாக சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படம் முதலுக்கே மோசமான தோல்வியை தழுவியது. இந்நிலையில், 2023ல் அக்ஷல் குமார் நடிப்பில் முதல் படமாக செஃபி வெளியாகவுள்ளது.

ட்ரெண்டான அக்ஷய் - மிருணாள்
ராஜ் மேத்தா இயக்கியுள்ள இந்தப் படத்தை கரன் ஜோஹர் உள்ளிட்ட மேலும் சிலர் தயாரித்துள்ளனர். வரும் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தில் அக்ஷய் குமாருடன் மிருணாள் தாகூர், நுஷ்ரத் பருச்சா, இம்ரான் ஹாஷ்மி ஆகியோரும் நடித்துள்ளனர். அக்ஷய் குமார் இதில் நடிகராகவே வருகிறார், அதேபோல் மிருணாள் தாகூரும் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. சீதா ராமம் படம் மூலம் பிரபலமான மிருணாள் தாகூர் தற்போது பாலிவுட்டில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில், மிருணாள் தாகூர் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

வைப் கொடுத்த செல்ஃபி சாங்
வரும் 24ம் தேதி செல்ஃபி ரிலீஸாகவுள்ளதால், அந்தப் படத்தில் இருந்து Kudiyee Ni Teri என்ற பாடலை படக்குழு தற்போது வெளியிட்டது. இந்தப் பாடலில் அக்ஷய் குமாரும் மிருணாள் தாகூரும் வைப் மோடில் வேற லெவலில் ஆட்டம் போட்டுள்ளனர். சீதா ராமம் படத்தில் ஹோம்லியாக நடித்த மிருணாள் தாகூரா இது என ரசிகர்களே மிரண்டு போயுள்ளனர். தனது இன்ஸ்டாவில் மட்டுமே கிளாமர் புகைப்படங்களை ஷேர் செய்து வந்த மிருணாள், வைப் பாடலில் கொஞ்சம் இறங்கிய அடித்துள்ளார். இதனால் Kudiyee Ni Teri பாடல் வெளியானது முதல் இணையத்தை கலக்கி வருகிறது.

ஏய் எப்புர்ரா மொமண்ட்
மிருணாளுக்கு போட்டியாக அக்ஷய் குமாரும் தனது சிக்ஸ் பேக்கை காட்டி ரசிகைகளுக்கு கிளாமர் ட்ரீட் கொடுத்துள்ளார். இந்தப் பாடலின் இறுதியில் நொறுங்கி விழும் ஹெலிகாஃப்டர் ஒன்றை அக்ஷய் குமார் ஒற்றை கையால் தடுத்து நிறுத்துகிறார். இந்த சீனை பார்த்த ரசிகர்கள் ஏய் எப்புர்ரா என அதிர்ச்சியில் திணறி நிற்கின்றனர். மேலும் பாடலே இப்படி இருக்கு, இதுல படத்தில் என்னவெல்லாம் ஆக்ஷன் கிரின்ஞ் இருக்குமோ என கமெண்ட்ஸ் செய்து கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











