சேலை கட்டுவது சிரமமா இல்லை.. உள்ளிருக்கும் பெண்மையை அது தான் வெளியே கொண்டுவருகிறது – அக்ஷய்!
Recommended Video
மும்பை: ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் லக்ஷ்மி பாம் படத்தில் நடித்து வரும் ராகவா லான்ஸ் சேலை கட்டுவது தனக்கு சிரமமாக இல்லை எனக் கூறியுள்ளார்.
மேலும், உள்ளிருக்கும் பெண்மையை வெளியே கொண்டு வந்து பாடி லேங்குவேஜை பக்காவாக செய்ய சேலை தான் உதவுகிறது என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்துள்ளார்.
தமிழில் வெளியான காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த லக்ஷ்மி பாம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநங்கை
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா முதல் பாகத்தில் திருநங்கையாக சரத்குமார் நடித்திருப்பார். அவரது ஆவி, ஹீரோவான ராகவா லாரன்ஸ் மீது வர அவரும் பெண் வேடம் அணிந்து எதிரிகளை பழி வாங்குவார். பாலிவுட்டில் தற்போது அந்த படத்தின் ரீமேக்கை அக்ஷயை வைத்து லாரன்ஸ் இயக்கி வருகிறார். அக்ஷய் குமார் வெளியிட்ட திருநங்கை லுக் போட்டோ இணையத்தில் வைரலானது.

போன வருஷம் செம வேட்டை
கேசரி, மிஷன் மங்கள், ஹவுஸ்ஃபுல் 4, குட் நியூஸ் என கடந்த 2019ம் ஆண்டு அக்ஷய் குமாருக்கு பாலிவுட்டில் செம வேட்டை. ஃபோர்ப்ஸ் வெளியிட்ட டாப் 100 இந்திய பிரபலங்கள் பட்டியலிலும் விராத் கோஹ்லிக்கு அடுத்த இடத்தில் அக்ஷய் குமார் தான் 250 கோடிக்கும் மேல் கடந்த ஆண்டு சம்பாதித்து இருந்தார்.

கியாரா அத்வானி
எம்.எஸ். தோனி, லஸ்ட் ஸ்டோரிஸ் என பாலிவுட்டை கலக்கி வரும் கியாரா அத்வானி, கிறிஸ்துமஸை முன்னிட்டு அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான குட் நியூஸ் படத்தில் நடித்திருந்தார். லக்ஷ்மி பாம் படத்திலும் அக்ஷய்க்கு அவர் தான் ஜோடி.

சேலை கட்டுவது
புத்தாண்டை முன்னிட்டு பாலிவுட் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அக்ஷய் குமாரிடம், சேலை கட்டுவது சிரமமாக இல்லையா என்ற கேள்வி கேட்கப்பட, சேலை கட்டுவது சிரமமாக இல்லை. பெண் தன்மை கொண்ட அந்த கதாபாத்திரத்தை வெளிக்கொண்டு வர சேலை தான் வசதியாக இருக்கிறது என புன்னகையுடன் பதிலளித்துள்ளார்.

எப்போ ரிலீஸ்
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி வரும் லக்ஷ்மி பாம் திரைப்படம் இந்த ஆண்டு மே 22ம் தேதி கோடை விடுமுறை கொண்டாட்டமாக வெளியாகிறது.

2020 எப்படி?
2019ம் ஆண்டு 4 படங்களை ரிலீஸ் செய்த அக்ஷய் குமார், 2020ல் ஒரு படி மேலே போய் 6 படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். அக்ஷய் குமார் நடிப்பில் சூர்யவன்ஷி, மஹிலா மண்டலி, லக்ஷ்மி பாம், பிரித்விராஜ், ஹெரா பெரி 3 மற்றும் பச்சன் பாண்டே என இந்த ஆண்டு 6 படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன.


Click it and Unblock the Notifications