25 கோடி.. இப்போ இல்லன்னா எப்போ.. அதிரடியாக கொரோனா நிதி அறிவித்த அக்‌ஷய் குமார்!

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் ட்வீட்டை பார்த்த சில நிமிடங்களிலேயே பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கொரோனா நிவாரண நிதியாக 25 கோடி ரூபாயை கொடுக்க முன்வந்துள்ளார்.

Recommended Video

Allu Arjun Huge Contribution | FEFSI Workers

உலகையே ஒற்றை வைரஸ் ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின். அமெரிக்காவில் எல்லாம் நாளுக்கு நாள் கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

உலகளவில் இந்த கொடிய தொற்று நோய்க்கு இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

நிதி அளியுங்கள்

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை நம் நாட்டில் 873 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19பேர் பலியாகி உள்ளனர். 79 பேர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்தியர்களே, கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கு கொள்ளுங்கள், மக்களை காக்க முயன்ற நிதி அளியுங்கள் என பதிவிட்டு இருந்தார்.

25 கோடி நிதி

பிரதமர் மோடியின் ட்வீட்டை பார்த்த சற்று நேரத்திலேயே நடிகர் அக்‌ஷய் குமார், இது தான் நேரம், நாட்டையும், மக்களையும் காப்பாற்ற எவ்வளவு முடிகிறதோ கொடுக்க வேண்டும், நான் எனது சேமிப்பில் இருந்து 25 கோடி ரூபாய் நிதியளிக்கிறேன் என அக்‌ஷய் குமார் உறுதி அளித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு, அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

குவிகிறது பாராட்டு

குவிகிறது பாராட்டு

மற்ற எல்லா நடிகர்களையும் ஓவர்டேக் செய்து விட்டு, 25 கோடி ரூபாய் எனும் பெரிய தொகையை கொடுக்க முன்வந்துள்ள பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை பலரும் பாராட்டி வருகின்றனர். மற்ற கான் நடிகர்கள் மற்றும், சூப்பர்ஸ்டார் நடிகர்களும் அக்‌ஷய் குமாரை போல தாராளமான நிதியை வழங்க வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக

முன்னதாக

முன்னதாக பிரதமர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் 3 கோடி ரூபாயும், நடிகர் பவன் கல்யாண் 1 கோடி ரூபாயும் கொடுப்பதாக அறிவித்துள்ளனர். மேலும், பல முன்னணி நட்சத்திரங்களும் தங்களின் பங்களிப்பை நாட்டு மக்களுக்காக தர முன் வந்துள்ளனர். இதுபோன்ற இக்கட்டான சூழலில் அமைதி காக்காமல் நாட்டு மக்களுக்கான தேவையை செய்வது அனைவரது கடமையாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X