நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம்.. மாதவன் மகன் சாதனை.. அக்ஷய் குமார், விவேக் அக்னிஹோத்ரி பாராட்டு!

சென்னை: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் டேனிஷ் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வாங்கி உள்ளார்.

இந்தியாவின் மற்றொரு வீரரான சஜன் பிரகாஷ் இந்த போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த இந்த இரு இளைஞர்களையும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டி உள்ளனர்.

வேதாந்த் மாதவன்

வேதாந்த் மாதவன்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வரும் நடிகர் மாதவனுக்கும் சரிதாவுக்கும் 1999ம் திருமணம் ஆனது. இருவருக்கும் வேதாந்த் எனும் மகன் உள்ளார். வாரிசு நடிகராக மாறாமல் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்து வருகிறார்.

வெண்கலப் பதக்கம்

வெண்கலப் பதக்கம்

கடந்த ஆண்டு நடைபெற்ற லத்வியன் ஓப்பன் நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட வேதாந்த் மாதவன் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்தார். அந்த சந்தோஷமான விஷயத்தை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வாழ்த்தி இருந்தார்.

வெள்ளிப் பதக்கம்

வெள்ளிப் பதக்கம்

இந்நிலையில், இந்த சம்மரை முன்னிட்டு டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற டேனிஷ் நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட மாதவனின் மகன் வேதாந்த் இறுதிச்சுற்று வரை முன்னேறி கடைசியாக சர்வதேச நாடுகளை சேர்ந்த 10 பேருடன் போட்டி போட்டார். அதில், இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

சஜன் பிரகாஷ்

சஜன் பிரகாஷ்

மேலும், மாதவன் மகன் வேதாந்த்தின் நண்பனான சஜன் பிரகாஷ் முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற லத்வியன் ஓப்பன் நீச்சல் போட்டியிலும் இவர் தான் தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனம் குளிர்ந்த மாதவன்

மனம் குளிர்ந்த மாதவன்

தனது மகன் மற்றும் மகனின் நண்பனான சஜன் பிரகாஷ் என இருவரும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ள நிலையில், இருவரையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி உள்ளார் நடிகர் மாதவன். மேலும், இவர்களுக்கு பயிற்சி கொடுத்த பயிற்சியாளர் பிரதீப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விவேக் அக்னிஹோத்ரி பாராட்டு

விவேக் அக்னிஹோத்ரி பாராட்டு

தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி நடிகர் மாதவன் மகனின் இந்த அபார சாதனையை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார். மேலும், பெற்றோர்களை நிஜமாகவே வேதாந்த் பெருமைப்படுத்தி உள்ளார். இந்த தருணத்தை எப்படி உணர்கிறீர்கள் மாதவன் என கேள்வியும் எழுப்பி உள்ளார். விவேக் அக்னிஹோத்ரிக்கு நன்றி தெரிவித்துள்ளார் மாதவன்.

அக்‌ஷய் குமார் பாராட்டு

அக்‌ஷய் குமார் பாராட்டு

இந்த இளம் வீரர்கள் இந்தியாவிற்கே பெருமைத்தேடி தந்துள்ளனர் என சஜன் பிரகாஷ் மற்றும் வேதாந்த் மாதவனை பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார் தற்போது பாராட்டி உள்ளார். தந்தையாக இது நிச்சயம் நடிகர் மாதவனை பெருமைப்படுத்தி இருக்கும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். நடிகர் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் வேதாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X