twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லாக்டவுனில் தன் சகோதரிக்காக தனி விமானம் ஏற்பாடு செய்தாரா? பிரபல ஹீரோ அதிர்ச்சி..திடீர் எச்சரிக்கை!

    By
    |

    சென்னை: தனது சகோதரி டெல்லி செல்வதற்காக தனி விமானத்தை அமர்த்தியதாக வந்த செய்தியை, பிரபல நடிகர் மறுத்துள்ளார்.

    பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

    இதையடுத்து தமிழில் ஹிட்டான காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறார். இதை ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார்.

    சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்ற பிரபல இளம் இசை அமைப்பாளர் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி! சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்ற பிரபல இளம் இசை அமைப்பாளர் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!

    லாக்டவுன்

    லாக்டவுன்

    கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். லாக்டவுன் காரணமாக, தியேட்டரில் ரிலீஸ் ஆகவேண்டிய இந்தப் படம் ஓ.டி.டியில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் தனுஷ், சாரா அலிகான், ஆகியோருடன் அட்ரங்கி ரே என்ற படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

    சிறப்பு விமானம்

    சிறப்பு விமானம்

    நடிகர் அக்‌ஷய்குமார் தாராள மனம் கொண்டவர். திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டுக்கு ரூ. 1. 5 கோடி வழங்கினார். கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவர் இந்த லாக்டவுனில், தனது சகோதரி அல்கா பாட்டியா, அவர் குழந்தைகள் பாதுகாப்பாக டெல்லிக்கு செல்ல, சிறப்பு விமானம் ஒன்றைத் தனியாக ஏற்பாடு செய்தார் என்று செய்தி வெளியானது.

    பொய்யானது

    பொய்யானது

    அவர்களை கவனித்துக் கொள்ள 4 விமானப் பணிப்பெண்களும் சென்றதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து இந்தச் செய்தி பாலிவுட்டில் பரபரப்பானது. இந்நிலையில் இதை மறுத்துள்ள நடிகர் அக்‌ஷய்குமார், இந்தக் கதை முழுவதுமே பொய்யானது என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

    நடவடிக்கை

    நடவடிக்கை

    'எனது சகோதரி லாக்டவுன் நேரத்தில் எங்கும் செல்லவில்லை. அவருக்கு ஒரே ஒரு குழந்தைதான். இவர்களுக்குத் தனி விமானத்தை அமர்த்தினேன் என்று சொல்வது போலியானது' என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்றத் தவறானச் செய்திகளை வெளியிட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்துள்ளார்.

    English summary
    Akshay Kumar rubbishes reports of booking charter flight for sister, tweets news ‘fake from start to end
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X