இவருக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாகுது? மீண்டும் ஒடிடியில் ரிலீசாகும் அக்‌ஷய் குமார் படம்!

மும்பை: கொரோனா பரவல் குறைந்து மீண்டும் எப்போது தியேட்டர்கள் திறக்கும் படங்களை எப்படி ரிலீஸ் பண்ணலாம் என முன்னணி நடிகர்கள் காத்துக் கொண்டு இருக்கும் நிலையில், அடுத்தடுத்து தனது படங்களை ஒடிடியில் வெளியிட்டு லாபம் பார்த்து வருகிறார் அக்‌ஷய் குமார்.

இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவான லக்‌ஷ்மி படத்தை கடந்த ஆண்டு தீபாவளிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், பெல்பாட்டம் படமும் நேரடியாக ஒடிடியில் வெளியாகும் என்கிற உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெல் பாட்டம்

பெல் பாட்டம்

இயக்குநர் ரஞ்சித் திவாரி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், ஹூமா குரேஷி, வாணி கபூர் நடித்துள்ள படம் பெல் பாட்டம். கடந்த ஆண்டு நாடு முழுவதும் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், பிரத்யேக அனுமதி பெற்று வெளிநாட்டில் குவாரண்டைன் செய்யப்பட்டு இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தினர்.

25 கோடி

25 கோடி

முன்னணி சினிமா நடிகர்கள் ஒரு கோடி ரூபாய், இரண்டு கோடி ரூபாய் என நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா நிவாரண நிதி வழங்கிய நிலையில், பிரதமர் நிவாரண நிதிக்கு அதிகபட்சமாக 25 கோடி ரூபாய் நிதி வழங்கி அசத்தினார் அக்‌ஷய் குமார். மேலும், கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்களிலும் நடித்து மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான லக்‌ஷ்மி திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனால், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அதிகப்படியான மக்கள் அந்த படத்தை பார்த்ததாகவும் நல்ல வசூலை படம் ஈட்டியதாகவும் படக்குழு அறிவித்தது.

ஒடிடி நோக்கி

ஒடிடி நோக்கி

முன்னணி நடிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் படங்களை ஒடிடியில் வெளியிட முயற்சித்து வருகின்றனர். தமிழில் நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று நேரடி ஒடிடி ரிலீசாக வெளியானது. தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் தியேட்டரில் வெளியாகி 16 நாட்களிலேயே ஒடிடியில் வெளியானது. சமீபத்தில் சல்மான் கானின் ராதே திரைப்படமும் நேரடியாக ஒடிடியில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

மீண்டும் ஒடிடியில்

மீண்டும் ஒடிடியில்

பல நூறு கோடிகளை கொடுத்து புதிய படங்களை வாங்க நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜி சினிமாஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. லக்‌ஷ்மி படத்தைத் தொடர்ந்து பெல் பாட்டம் படத்தையும் ஒடிடியில் அக்‌ஷய் குமார் வெளியிடப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. பெல் பாட்டம் படத்திற்கு பெரும் தொகை பேசப்பட்டு வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X