twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெல் பாட்டம் பட ரிலீசுக்கு வந்த சிக்கல்...பாவம் அக்ஷய் குமார்

    |

    மும்பை : கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் டிஜிட்டலில் ரிலீஸ் செய்யப்படும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் டிஜிட்டல் தளங்களில் படங்களின் வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது. அதே சமயம் சில படங்களுக்கு இது பிரச்சனையாகவும் மாறி உள்ளது.

    முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் நன்மைகள்…. விழிப்புணர்வு குறும்படத்தில் விளக்கிய பிரபல நடிகை !முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் நன்மைகள்…. விழிப்புணர்வு குறும்படத்தில் விளக்கிய பிரபல நடிகை !

    இதே கதை தான் அக்ஷய் குமார் நடித்துள்ள பெல் பாட்டம் படத்திற்கும் வந்துள்ளது. இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்த 20 நாட்களில் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய படத் தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அப்படி செய்தால் அது படத்தின் தியேட்டர் வசூலை பாதிக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் கருதுகின்றனர்.

    பெல் பாட்டம் ரிலீசை புறக்கணிக்க முடிவு

    பெல் பாட்டம் ரிலீசை புறக்கணிக்க முடிவு

    இதனால் பெல் பாட்டம் படக்குழுவினரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தியேட்டர் உரிமையாளர்கள், பெல் பாட்டம் படத்தின் ரிலீசை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    எப்படி படம் பார்க்க வருவார்கள்

    எப்படி படம் பார்க்க வருவார்கள்

    இது பற்றி விநியோகஸ்தர் கூறுகையில், ரிலீஸ் பற்றி பெல் பாட்டம் குழுவினரிடம் பேசி உள்ளோம். தயாரிப்பாளர்களின் நிலை எங்களுக்கு புரிகிறது. அவர்கள் எங்களின் நிலையையும் புரிந்து கொள்ள வேண்டும். 2 வாரங்களில் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்தால் மக்கள் எவ்வாறு தியேட்டருக்கு படம் பார்க்க வருவார்கள் என்கிறார்.

    தியேட்டர் உரிமையாளர்கள் எச்சரிக்கை

    தியேட்டர் உரிமையாளர்கள் எச்சரிக்கை

    மேலும் மல்டிபிளக்ஸ் சங்கமும் படக்குழுவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படம் ரிலீசாகி குறைந்தது 28 நாட்களுக்காவது ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யக் கூடாது என கராராக சொல்லி உள்ளனர். இதையும் மீறி படத்தை ரிலீஸ் செய்ய பெல் பாட்டம் குழு முயற்சித்தால், நாட்டில் எந்த தியேட்டரிலும் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என எச்சரித்துள்ளனர்.

    தவறான முன்னுதாரணம்

    தவறான முன்னுதாரணம்

    இது அடுத்து ரிலீசாக போகும் புதிய படங்களுக்கு தவறான முன்னுதாரணம் ஆகி விடும் என அவர்கள் நினைக்கிறார்கள். படங்களை 2 அல்லது 3 வாரங்களில் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்தால் அது தியேட்டர் உரிமையாளர்களின் வருமானத்தை பாதிக்கும் என மல்டிபிளக்ஸ் உரிமையாளர்களும் கூறுகின்றனர். இதனால் படத்தை எப்படி ரிலீஸ் செய்வது, அடுத்து என்ன செய்வது என பெல் பாட்டம் படக்குழு குழம்பிப் போய் உள்ளது.

    English summary
    theatre owners aren't happy with the decision of Akshay Kumar's 'Bell Bottom'makers and are willing to boycott the release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X