'2.O' படத்தில் வில்லன் அக்‌ஷய்குமார் இல்லையா? - அப்போ யாரு

By Vignesh Selvaraj

சென்னை : '2.ஓ' படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் கேரக்டர் பற்றி பலவிதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் அவர் வில்லன் கேரக்டரில் நடிக்கவில்லை எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கும் '2.O' படம் அடுத்த ஏப்ரலில் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி மாதம் வெளியாகவிருந்த படம் அக்‌ஷய் குமாரின் 'PADMAN' படத்தால் ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளிப் போயிருக்கிறது. இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் மேலும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வில்லன் அக்‌ஷய் குமாரா?

வில்லன் அக்‌ஷய் குமாரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.O' படத்தில் ரஜினி நாயகனாக நடிக்க, அக்‌ஷய் குமார் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின. அவரும் வில்லன் போன்ற தோற்றத்தில் தான் போஸ்டர்களில் காணப்படுகிறார்.

இதுவரை எங்கேயும் சொல்லவில்லை

ஆனால் இதுவரை அந்தப் படக்குழுவில் இருந்து ஷங்கர் உட்பட யாரும் அக்‌ஷய் குமார் வில்லன் என்று சொல்லவில்லை. ரஜினி கூட அக்‌ஷய் குமார் நடித்துள்ள வேடம்தான் எனக்கு மிகவும் பிடித்தமான வேடம் என்று கூறியிருக்கிறார்.

பல கெட்டப்களில் அக்‌ஷய்

பல கெட்டப்களில் அக்‌ஷய்

மேலும், '2.ஓ' படத்தில் அக்‌ஷய்குமார் பல கெட்டப்புகளில் நடித்திருப்பதாக அப்படத்தின் டைரக்டர் ஷங்கர் கூறினார். ஆனாலும் அவரது கதாபாத்திரம் குறித்து அவரும் இதுவரை தெளிவுபடுத்தவில்லை என்பதுதான் ரசிகர்களின் க்யூரியாசிட்டியை அதிகரித்துள்ளது.

டாக்டர் கேரக்டரா

டாக்டர் கேரக்டரா

இந்தநிலையில், '2.ஓ' படத்தில் அக்‌ஷய் குமாரின் வேடம் குறித்து தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இந்தப் படத்தில் டாக்டர் ரிச்சர்ட் என்ற வேடத்தில் நடிக்கிறாராம் அக்‌ஷய் குமார். இது நெகட்டிவ் கேரக்டர் இல்லை எனக் கூறுகிறார்கள்.

பாசிட்டிவ் கேரக்டர்

பாசிட்டிவ் கேரக்டர்

பூமியைப் பேரழிவிற்கு கொண்டு செல்லும் தீய சக்திக்கு எதிராகப் போராடும் வேடத்தில் அவர் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் அவரது ஆவேசமான நடிப்பும், கெட்டப்பும் வில்லத்தனத்தை வெளிப்படுத்துவது போல் இருக்கும் என்கிறார்கள்.

எந்திரன் படத்தில் போஹ்ரா

எந்திரன் படத்தில் போஹ்ரா

'எந்திரன்' படத்தில் டேனி டென்ஸொங்க்பா நடித்த 'போஹ்ரா' கேரக்டர் தீய விஞ்ஞானியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ரஜினியின் குருவான அவர் வில்லத்தனங்கள் செய்து ரோபோவை திசை மாற்றுவார். அந்த மாதிரியான கேரக்டரில் அக்‌ஷய் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

வில்லன் யார்?

வில்லன் யார்?

'எந்திரன்' படத்தில் ரெட் சிப் சொருகப்பட்ட சிட்டி ரோபோ தீய செயல்களில் ஈடுபட்டு சேதத்தை விளைவிப்பதைப் போல இந்தப் படத்தில் ரஜினியின் ரோபோ கேரக்டரே வில்லனாகச் செயல்படலாம். இந்தப் படத்தில் ரோபோவுக்கு ரோபோ மீது ஏற்படும் காதல்தான் கதை என்பதுபோல் பாடலில் சில வரிகள் இடம்பெற்றிருக்கின்றன.

ட்விஸ்டாக இருக்குமோ?

ட்விஸ்டாக இருக்குமோ?

ஒருவேளை, அக்‌ஷய் குமார் இன்டர்வெல் வரை தீயவரைப் போல காட்டப்பட்டு இன்டர்மிஷன் ட்விஸ்டாக அவரை நல்லவராக்கி ரஜினி ரோபோவையே வில்லனாகக் காட்டுவார்களோ என்னவோ..? படம் வெளிவருவதற்குள் இன்னும் என்னென்னவெல்லாம் கிளம்பப் போகிறதோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X