twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்தடுத்து அடிவாங்கும் பாலிவுட் படங்கள்...அமீர்கானுக்கு சர்ச்சை...அக்ஷய்குமாருக்கு என்னாச்சு?

    |

    மும்பை :நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் அண்ணன் - தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ரக்ஷாபந்தன். சகோதர பாசத்தை உணர்த்தும் தினமான ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 11 ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

    Akshay Kumars film drops to around ₹6 crore on Friday

    டைரக்டர் ஆனந்த் எல்.ராய் இயக்கிய இந்த படத்தில் லாலா கேதார்நாத் என்ற கேரக்டரில் அக்ஷய்குமார் நடித்துள்ளார். நான்கு தங்கைகளுக்கு அண்ணனான அக்ஷய் குமார், தங்கைகளின் திருமணம் செய்து வைக்க எடுக்கும் முயற்சிகள் தான் படத்தின் கதை. திருமணத்தின் போது வரும் வரதட்சணை, உருவ கேலி போன்ற பிரச்சனைகள், தடைகளை அக்ஷய் எவ்வாறு சமாளிக்கிறார் என்பதை காட்டி உள்ளனர்.

    அக்ஷய் குமாரை காதலிக்கும் பெண்ணாக பூமி பட்நேகர் நடித்துள்ளார். அக்ஷய் குமாரின் நான்கு தங்கைகளாக சாடியா காடீப், ஷகிஜ்மீன் கவுர், தீபிகா கன்னா, ஸ்மிருதி ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

    வாழ்நாளின் முதல் பொக்கிஷம்... அடிக்கடி ரகசியமாக போட்டோ எடுத்துக்கொள்ளும் ரஜினி: தலைவர் தலைவர் தான்! வாழ்நாளின் முதல் பொக்கிஷம்... அடிக்கடி ரகசியமாக போட்டோ எடுத்துக்கொள்ளும் ரஜினி: தலைவர் தலைவர் தான்!

    அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் முதல் நாளில் ரூ.8.2 கோடிகளை வசூல் செய்தது. எதிர்பார்த்ததை விட இது குறைவான வசூல் என்றாலும், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சூடுபிடித்து, வசூல் அதிகரிக்கும் என சினிமா வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ஈவினிங் ஷோவிற்கு அதிக கூட்டம் வந்ததால் இனி வரும் நாட்களில் வசூல் படிப்படியாக உயரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அடுத்த நாளே ரக்ஷாபந்தன் படத்தின் வசூல் 30 சதவீதம் சரிந்து 5.50 முதல் 6 கோடிகளானது. இதே நாளில் ரிலீசான அமீர் கானின் லால் சிங் சத்தா படத்துடன் ஒப்பிடுகையில், ரக்ஷாபந்தன் படம் குறைவான வசூலையே பெற்றுள்ளது.

    இந்திய ராணுவம் மற்றும் இந்து மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளதாக அமீர் கான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்ட சர்ச்சை காரணமாக லால் சிங் சத்தா படத்தின் வசூல் திடீரென இரண்டாவது நாளே பாதியாக குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் குடும்ப சென்டிமென்ட் படமாக எடுக்கப்பட்டுள்ள ரக்ஷாபந்தனின் வசூல் குறைந்ததற்கு என்ன காரணம் என தெரியாமல் அனைவரும் குழம்பி வருகின்றனர்.

    இந்த ஆண்டில் ரிலீசான அக்ஷய் குமாரின் 3வது படம் இதுவாகும். இதற்கு முன் ரிலீசான பச்சன் பாண்டே, சாம்ராட் ப்ருத்விராஜ் போன்ற படங்களின் ஓப்பனிங் நாள் வசூலான ரூ.8.20 கோடியும் ஒப்பிடுகையில் ரக்ஷாபந்தன் படத்தின் வசூல் குறைவு தான்.

    English summary
    Raksha Bandhan, starring Akshay Kumar as a dutiful brother to four sisters, registered a drop on day two of its release in theatres. The film had opened on the festival of Raksha Bandhan with a collection of ₹8.2 crore but fell to around ₹6 crore the next day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X