கொடியவனின் கதையை முடிக்க.. இந்தி வெர்ஷனில் மிரட்டி இருக்கிறார் அக்ஷய் குமார்.. பம்போலே செம தூள்!
மும்பை: லக்ஷ்மி படத்தின் பம்போலே பாடல் வீடியோ வெளியாகி வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது.
இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி உள்ள லக்ஷ்மி படம் தீபாவளியை முன்னிட்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
காஞ்சனா படத்தின் கிளைமேக்ஸில் வரும் "கொடியவனின் கதையை முடிக்க" பாடலின் இந்தி வெர்ஷன் தான் இது.

டைட்டில் சர்ச்சை
லக்ஷ்மி பாம் என வைக்கப்பட்ட படத்தின் டைட்டிலுக்கு எதிராக கிளம்பிய சர்ச்சை காரணமாக படக்குழு பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் லக்ஷ்மி என டைட்டிலை ஃபான்ட் கூட மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் மாற்றி அமைத்தது. தமிழில் வெளியான காஞ்சனா படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போ ரிலீஸ்
தீபாவளி சரவெடியாக இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வரும் நவம்பர் 9ம் தேதி வெளியாகிறது. இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், அக்ஷய் குமார், கியாரா அத்வானி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான லக்ஷ்மி படத்தின் டிரைலர் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
பம்போலே
இந்நிலையில், தற்போது லக்ஷ்மி படத்தின் கிளைமேக்ஸ் வீடியோ பாடலான பம்போலே பாடல் வீடியோவை நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பகக்த்தில் வெளியிட்டுள்ளார். பம்போலே பாடலில் சேலை கட்டி திருநங்கை போல இருக்கும் நடிகர் அக்ஷய் குமாரின் லுக்கை பார்த்த ரசிகர்கள் ஆடிப் போயுள்ளனர்.

பேயாட்டம்
ராகவா லாரன்ஸ் படம் என்றால், நடனத்திற்கு பஞ்சமே இருக்காது. இதற்கு முன் அக்ஷய் குமார் இந்த அளவிற்கு இப்படியொரு பேய் ஆட்டத்தை ஆடியிருப்பாரா? என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கு வேற லெவல் பர்ஃபார்மன்ஸையும் எனர்ஜியையும் பாடல் முழுக்க கொடுத்துள்ளார் அக்ஷய்.

எது சூப்பர்?
காஞ்சனா படத்தில் இடம்பெற்ற கிளைமேக்ஸ் பாடலான "கொடியவனின் கதையை முடிக்க" பாடலையும் இந்த "பம்போலே" பாடலையும் கம்பேர் பண்ணால், அந்த பாடலில் வரும் ஒரு வித பயம் மட்டுமே இதில் மிஸ்சிங் என்று சொல்லலாம். பிரம்மாண்டம், அக்ஷய் குமாரின் நடனம், வித்தியாசமான இசை என அனைத்தும் சூப்பர்.


Click it and Unblock the Notifications