ஓடிடி ரிலீஸிலிருந்து விலகும் லக்ஷ்மி பாம்.. தியேட்டரில் ரிலீஸ்? திடீரென ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்!
சென்னை: அக்ஷய்குமாரின் லக்ஷ்மி பாம் திரைப்படம் ஓடிடி ரிலீஸில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்திருந்த படம் 'காஞ்சனா'. தற்போது 'லக்ஷ்மி பாம்' என்கிற பெயரில் இந்தியில் உருவாகியுள்ளது.
இந்தியில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி உள்ளிடோர் நடிக்கின்றனர். இந்தப் படம் நடிகர் லாரன்ஸ் இயக்கத்தில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

ஓடிடி தளத்தில்
இதில் காஞ்சனா படத்தில் நடிகர் சரத்குமார் நடித்த திருநங்கை கதாப்பாத்திரத்தில் திருநங்கையாக நடிக்கிறார் அக்ஷய்குமார். கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் லக்ஷ்மி பாம் படத்தை ஒட்டி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஓடிடியிலிருந்து விலகல்
அக்ஷய் குமார் பேச்சு வார்த்தை நடத்தி செப்டம்பர் 9 ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுவதில் இருந்து லக்ஷ்மி பாம் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒப்புதல்
லக்ஷ்மி பாம் ஒடிடியில் ரிலீஸ் ஆவதற்கு முன் தியேட்டரில் வெளியிடுவது பற்றி படக்குழு நடிகர் அக்ஷய் குமாரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் அதற்கு அக்ஷய் குமார் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி ரிலீஸ்
இதனால் லக்ஷ்மி பாம் ஒடிடியில் வெளியாவதிலிருந்து விலகுகிறது என்றும் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் தீபாவளிக்கே ரிலீஸ் ஆகலாம் என்றும் பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தியேட்டரில் வெளியான பிறகு லக்ஷ்மி பாம் ஒடிடிக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

ட்ரென்டிங்
இதனிடையே #LaxmmiBomb என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகிறது. ஓடிடியில் இருந்து லக்ஷ்மி பாம் விலகியுள்ளதால் தியேட்டர்கள் விரைவில் திறக்கப்படவுள்ளதா என்றும், ஓடிடியிலும் தியேட்டரிலும் ஒரே நேரத்தில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











