செம ட்விஸ்ட்.. தீபாவளிக்கு தியேட்டரில் வெடிக்கப் போகுது லக்‌ஷ்மி பாம்.. எப்படி தெரியுமா?

மும்பை: அக்‌ஷய் குமாரின் லக்‌ஷ்மி பாம் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆகப் போவதாக ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் நவம்பர் 9ம் தேதி லக்‌ஷ்மி பாம் திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தியேட்டர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

காஞ்சனா ரீமேக்

காஞ்சனா ரீமேக்

2011ம் ஆண்டு நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான காஞ்சனா படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் லக்‌ஷ்மி பாம். லாரன்ஸ், ராய் லக்‌ஷ்மி, கோவை சரளா, சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து இருந்தனர். அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள இந்த இந்தி படத்தை ராகவா லாரன்ஸே இயக்கி உள்ளார்.

லக்‌ஷ்மி பாம்

லக்‌ஷ்மி பாம்

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள லக்‌ஷ்மி பாம் திரைப்படத்திற்கான திரைக்கதையை லாரன்ஸ் உடன் இணைந்து ஃபார்ஹாத் சாம்ஜி என்பவர் பாலிவுட் ஸ்டைலுக்கு ஏற்ப எழுதி உள்ளார். லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி, துஷார் கபூர், ஷரத் கேல்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில்

தீபாவளிக்கு லக்‌ஷ்மி பாம் வெடிக்க தயாராகி விட்டது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 14ம் தேதி வருகிறது. அதனை முன்னிட்டு வரும் நவம்பர் 9ம் தேதி அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடித்துள்ள லக்‌ஷ்மி பாம் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது என்கிற அறிவிப்பை சமீபத்தில் ராகவா லாரன்ஸ் அறிவித்து இருந்தார்.

தியேட்டர்களிலும் ரிலீஸ்

தியேட்டர்களிலும் ரிலீஸ்

தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் இல்லை ஒடிடியில் தான் என்கிற அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது தியேட்டர்களிலும் இந்த படம் அதே நாள் வெளியாகப் போகிறது என்கிற சூப்பரான அப்டேட் வெளியாகி உள்ளது. தியேட்டர்கள் இயங்கி வரும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் லக்‌ஷ்மி பாம் தியேட்டர் ரிலீஸ் காண்கிறது.

வாய்ப்பு இருக்கா

வாய்ப்பு இருக்கா

வரும் அக்டோபர் 31ம் தேதி வரை இந்தியாவில் தியேட்டர்கள் திறக்கப் படாது என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. நவம்பர் மாதமாவது தியேட்டர்கள் திறக்கப்படுமா? என்கிற மிகப்பெரிய கேள்விக் குறியும் தற்போது எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகை சமயத்தில் தியேட்டர்களை திறந்து விட்டால், கூட்டம் அலைமோதும் என்கிற அச்சத்தால், இந்தியாவில் இந்த படம் தியேட்டரில் நவம்பர் 9ம் தேதி ரிலீசாக வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X