தியேட்டரில் இல்லை.. தீபாவளிக்கு வெடிக்கப் போகுது ராகவா லாரன்ஸ், அக்ஷய் குமாரின் லக்ஷ்மி பாம்!
மும்பை: இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள லக்ஷ்மி பாம் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் லக்ஷ்மி பாம் திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இடையே, ஒடிடி ரிலீஸ் இல்லை தியேட்டர் ரிலீஸ் எனும் பேச்சுக்கள் அடிபட்டன.

தியேட்டரில் இல்லை
ஆனால், தற்போது இயக்குநர் ராகவா லாரன்ஸ் திட்டவட்டமாக இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் இல்லை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தான் ரிலீசாகுது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அக்ஷய குமாரின் ரசிகர்கள் #LaxmmiBomb என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரிலீஸ் எப்போ
தீபாவளிக்கு லக்ஷ்மி பாம் வெடிக்க தயாராகி விட்டது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 14ம் தேதி வருகிறது. அதனை முன்னிட்டு வரும் நவம்பர் 9ம் தேதி அக்ஷய் குமார், கியாரா அத்வானி நடித்துள்ள லக்ஷ்மி பாம் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இந்தி காஞ்சனா
இந்த படம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து தமிழில் வெளியான ஹிட் பேய் படமான காஞ்சனா படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். 2011ம் ஆண்டு தமிழில் வெளியான இந்த பேய் ஹிட் படத்தை 2020ல் இந்தியில் ரீமேக் செய்து வெளியிடப் போகின்றனர்.

லக்ஷ்மண் இல்லை லக்ஷ்மி
தமிழில் காஞ்சனா கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். இந்தி ரீமேக்கில் அந்த கதாபாத்திரத்தில் யார் நடித்துள்ளார் என்பது இதுவரை ரிவீல் செய்யப்படவில்லை. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில், என் பெயர் லக்ஷ்மண் இல்லை லக்ஷ்மி என அக்ஷய் குமார் குரலில் தெறிக்கும் புரொமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

டிரைலர் எப்போ
மேலும், லக்ஷ்மி பாம் திரைப்படத்தின் டிரைலர் வரும் ஆயுத பூஜைக்கு வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. பாலிவுட்டில் நிலவும் பிரச்சனைகள் இன்னும் இரு மாதத்தில் சரியாகி விடும் என்கிற கணக்கை போட்டு, இப்போதைக்கு படத்தை ரிலீஸ் செய்யாமல் தீபாவளிக்கு தள்ளிப் போட்டுள்ளனர் படக்குழு என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











