Selfiee Review: அக்ஷய் குமாருக்கு அடுத்த டிசாஸ்டரா? செல்ஃபி ட்விட்டர் விமர்சனம் இதோ!
மும்பை: அக்ஷய் குமார், இம்ரான் ஹாஸ்மி, மிருணாள் தாகூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள செல்ஃபி திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான டிரைவிங் லைசன்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கானின் பதான் திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட்டில் மீண்டும் ரீமேக் படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை கோட்டை விட்டு வருகின்றன.
அலா வைகுந்தபுரமுலோ படத்தின் ரீமேக் படமான ஷெசாடா படம் சொதப்பிய நிலையில், செல்ஃபி படத்துக்கும் தியேட்டர்கள் ஈயாடுவதாக நெட்டிசன்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ரீமேக் பிடிக்கவில்லை
பாலிவுட் ரசிகர்களுக்கு சொந்தமாக வரும் படங்களை பார்க்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், தென்னிந்திய படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்களை ரீமேக் செய்து கொடுப்பது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்பதை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தாலும், 40க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்கள் தென்னிந்திய படங்களின் ரீமேக்காக உருவாகி வருவது தான் காமெடியின் உச்சம்.

அதள பாதாளத்தில் அக்ஷய் குமார் படங்கள்
பாலிவுட்டின் முன்னணி நடிகராக விளங்கி வந்த அக்ஷய குமார் சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் பல படங்கள் சொதப்பி வரும் நிலையில், அவரது பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. கடந்த ஆண்டு ஜிகர்தண்டா ரீமேக் இந்தியில் வெளியாகி சொதப்பிய நிலையில், இந்த ஆண்டு மலையாள ரீமேக் படமான செல்ஃபி சொதப்பி உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனங்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

ஒரு ஸ்டார் மட்டும் தான்
இம்ரான் ஹாஷ்மி நல்லாத்தான் நடிச்சிருக்காரு, ஆனால், அக்ஷய் குமார் தான் ஒரு சதவீதம் கூட நல்ல நடிப்பை வெளிப்படுத்தவே இல்லை என்றும், சமீபத்தில் வெளியான பாலிவுட் படங்களிலேயே ரொம்ப மோசமான படம் இந்த செல்ஃபி தான் என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

அவுட்ஸ்டாண்டிங்
அதே சமயம் அக்ஷய் குமார் ரசிகர்கள் செல்ஃபி படத்தை பாராட்டி வருகின்றனர். அவுட்ஸ்டாண்டிங் திரைப்படம் என்றும் 4 ஸ்டார் ரேட்டிங் இந்த படத்துக்கு கொடுக்கலாம் எனக் கூறுகின்றனர். ஆனால், நிறைய தியேட்டர்கள் காலியாக காத்துவாங்குவதாக அந்த ட்வீட்டுக்கு கீழ் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

ஷோவே கேன்சல் ஆகிடுச்சு
அக்ஷய் குமார் நடித்துள்ள செல்ஃபி படத்துக்கு ஆளே வராத நிலையில், ஆசை ஆசையாய் அக்ஷய் குமார் படத்தை பார்க்க தியேட்டருக்கு போன எனக்கு ஷோ கேன்சல் ஆகிடுச்சு என்கிற அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என காலியான தியேட்டர் வீடியோவை இந்த ரசிகர் பதிவிட்டு புலம்பி உள்ளார்.

வசூலில் தெரிந்துவிடும்
அக்ஷய் குமாரின் செல்ஃபி திரைப்படம் ஹிட்டா, ஃபிளாப்பா என்பது நாளை வெளியாகும் வசூல் விவரங்கள் மூலம் தெரிந்து விடும் என்றும் பதான் படம் மீண்டும் பாலிவுட்டை காப்பாற்றினாலும், இந்த மாதிரியான மோசமான ரீமேக் படங்கள் மீண்டும் பாலிவுட் சினிமாவை பழையபடி பின்னுக்குத் தள்ளி விடுகின்றன என ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

வீரம், கைதி ரீமேக் படங்கள் வருது
அடுத்து சல்மான் கான், பூஜா ஹெக்டே நடிப்பில் வீரம் படத்தின் இந்தி ரீமேக்கும், அஜய் தேவ்கன் நடிப்பில் கைதி படத்தின் இந்தி ரீமேக்கும் வெளியாக உள்ளன. அந்த படங்களின் நிலை என்ன ஆகப் போகிறதோ தெரியவில்லை என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











