மகன் ஆரவ்வின் பிறந்தநாளை சாகசத்துடன் கொண்டாடிய அக்ஷய் குமார்

சென்னை: பாலிவுட் ஹீரோக்களில் மிகவும் பிஸியாகவும் பரபரப்பாகவும் இருந்து வரும் பல ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் குமார் தனது மகன் ஆரவ்வின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியான நேற்று தன் குடும்பத்துடன் லண்டனில் கொண்டாடினர். இதை ஆரவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அக்ஷய் குமார் முந்தைய காலத்தில் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வந்த ஒரு பிஸியான நடிகர். 52 வயதான அவர் இன்றும் வரிசையாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்; நடித்திருந்தார்.

Akshay Kumar’s Son Aarav Kumar’s Birthday Celebration

எந்த காலமானாலும் சரி, எவ்வளவு பிஸியாக இருந்தாலும், சரி அக்ஷய் குமார் தனது குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தகுந்த நேரத்தை ஒதுக்கி அவர்களோடு சந்தோஷமாக செலவிடுவார். அக்ஷய் குமார் தற்போது தனது குடும்பத்துடன் விடுமுறைக்காக லண்டனுக்கு சென்றுள்ளார்.

அவரின் பிறந்த நாளான செப்டம்பர் 9ஆம் தேதியன்று அங்கு கொண்டாடினர். அப்போது ட்விங்கிள், அக்ஷய் மற்றும் நிதாரா மூவரும் ஒரு ஆபத்தான பாலத்தில் நடந்து சென்றனர். அங்கு அவர்கள் மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை ட்விங்கிள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவிற்கு இந்த பிறந்தநாள் மிகுந்த சாகசங்கள் நிறைந்த பிறந்த நாள் கொண்டாட்டமாக இருந்தது என்று பதிவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று அக்ஷய் குமாரின் மகன் ஆரவ்வின் 17ஆவது பிறந்தநாளையும் அங்கு குதூகலமாக கொண்டாடினர். மகன் மீது கொண்டுள்ள அன்பை தெரிவிக்கும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனது தந்தையிடம் இருந்து நான் கற்று கொண்டது என்னவென்றால், ஏதாவது ஒரு இடத்தில் நான் குழப்பம் அடைந்தால், குழம்புவதற்கு பதிலாக அதை உடனே நான் என் தந்தையிடம் அதை எடுத்து செல்லும் உரிமையை கொடுத்திருந்தார்.

அதே போல் நானும் உன்னுடன் என்றும் பக்கபலமாக இருந்து உன்னை வழி நடத்துவேன். ஹாப்பி பர்த்டே ஆரவ் என்று தனது மகன் ஆரவ்விற்க்காக ஒரு இதயபூர்வமான குறிப்பை போஸ்ட் செய்திருந்தார்.

இப்படி குதூகலமும் அன்புப் பரிமாற்றங்களுடன் அப்பா, மகன் இருவரது பிறந்தநாளும் மிகுந்த சந்தோஷத்துடன் கொண்டாடப்பட்டது. இத்தனை பிஸியான வேளையிலும் அக்ஷய் குமார் தனது குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கி முக்கியத்துவம் கொடுத்தது பாராட்டத்தக்க விஷயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X