twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெரிய டைரக்டர்கள் என்னை கண்டுக்க மாட்டேங்கிறாங்களே... ரஜினி வில்லன் கிர்ர்ர்!

    By
    |

    மும்பை: பெரிய இயக்குனர்கள் வாய்ப்பு தர மறுப்பதால்தான் அறிமுக இயக்குனர்கள் படங்களில் அதிகமாக நடிக்கிறேன் என்று பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

    பிரபல இந்தி ஹீரோ அக்‌ஷய் குமார். இவர் தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துவருகிறார். இதை ராகவா லாரன்ஸ் இயக்குகிறார்.

     Akshay Kumar says Big directors dont take him in their films

    இதற்கிடையே இவர் நடித்துள்ள குட் நியூஸ் (Good Newwz) என்ற இந்திப் படம், இந்த மாதம் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் கரீனா கபூர், கியாரா அத்வானி, அடில் ஹுசைன் உட்பட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் ராஜ் மேத்தா இயக்கியுள்ளார். அக்‌ஷய் குமார் படத்தை இயக்கும் 21 வது அறிமுக இயக்குனர் இவர்.

    இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது அக்‌ஷய் குமாரிடம், ஏன் புது டைரக்டர்கள் படங்கள்லயே அதிகமா நடிக்கிறீங்க? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அக்‌ஷய், நானா மாட்டேன்கிறேன். பெரிய டைரக்டர்கள் எனக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டேங்கிறாங்க. இதுதான் உண்மை.

    அவங்க கண்டுக்கலைன்னா, நாம நம்ம வழிலதான போக முடியும்... இப்ப பெரிய பத்திரிகைகள்ல வேலை கிடைக்கலைன்னா என்ன செய்வீங்க? சின்ன பத்திரிகைகளுக்கு போக வேண்டியதுதான். அங்க இருந்து அப்புறம் மாறிக்கலாம். அதுக்காக, வீட்டுல சும்மா உட்கார்ந்துகிட்டு, எனக்கு திறமை இருந்தும் என்னை ஏன் பெரிய டைரக்டர்கள் கண்டுக்கலைன்னு கவலைப்பட்டுட்டு இருக்க முடியாது. அப்படி இருந்தாலும் எதுவும் நடந்திராது, சரிதானே... என்றார் கூலாக.

    ஒரு கால கட்டத்துல கான் நடிகர்களை இயக்கத்தான் பெரிய டைரக்டர்கள் அதிகமா ஆர்வம் காட்டினாங்களா? என்ற கேள்விக்கு, யார் தகுதியானவங்களோ அவங்களை தேடிப் போயிருக்கலாம். கான்கள் மட்டுமில்ல, கபூர்களும் மற்றவங்களும்தான் இருந்தாங்க. அதுக்கு நான் தகுதியில்லாதவன்னு நினைச்சதால, என்வழியில போக ஆரம்பிச்சுட்டேன்.

    நான் நடிக்கும் படங்களை பெரிய டைரக்டர்கள் தயாரிக்கிறாங்க. ஆனா, நடிக்க வைக்கலை. இந்தப் படத்தை கூட பாருங்க, கரண் ஜோஹரும் சேர்ந்துதான் தயாரிக்கிறார். அவர்ட்ட என்னை ஏன் இயக்க மறுக்கிறீங்கன்னு கேளுங்களேன் என்கிறார் அக்‌ஷய்.

    மேலும் கூறும்போது, அப்புறம் புது இயக்குனர்களுக்கு முதல் படம்ங்கறது ரொம்ப முக்கியம். அது அவங்க வாழ்க்கை பிரச்னை. செய் அல்லது செத்துமடிங்கற மனநிலைதான். அதனால அவங்க கடுமையா உழைப்பாங்க. இதுல என்னடோ பங்களிப்புங்கறது நடிப்பு மட்டும்தான்.

    எப்பவும் நான் கதைகளைத்தான் நம்பறேன். கதையும் திரைக்கதையும் பக்காவா இருந்தா 60 சதவிகித வேலை முடிஞ்சிரும். மற்ற 40 சதவிகித வேலையை டைரக்டர் பார்த்துப்பார்' என்கிறார் அனுபவ அக்‌ஷய்.

    கேட்டுக்குங்க இளம் இயக்குனர்களே!

    Read more about: akshay kumar karan johar
    English summary
    Actor Akshay Kumar says, he work with new directors because big directors don't take him in their films
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X