'ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி'யை விட நன்றாக தமிழ் பேசிய அக்ஷய் குமார்
சென்னை: 2.0 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தமிழில் பேசினார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்ஷய் குமார் தமிழில் பேசி அசத்தினார்.
அவரின் முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும்.

அக்ஷய் குமார்
இன்று நான் தமிழில் பேசப் போகிறேன். என் உச்சரிப்பு தவறாக இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். நான் தமிழில் பேச 2, 3 மணிநேரம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். தமிழில் பேச பயமாக உள்ளது. இருப்பினும் பேசப் போகிறேன் என்று கூறி தான் எழுதி வைத்து வந்த வாக்கியங்களை பேசினார் அக்ஷய் குமார்.

மகிழ்ச்சி
வணக்கம் சென்னை. மாகிழ்ச்சி(அவர் பேசியது) என்று துவங்கி தத்தித் தத்தி தமிழ் பேசினார் அக்ஷய் குமார். அவரின் உச்சரிப்பு சரியில்லை என்றாலும் தமிழக ரசிகர்களுக்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியை பாராட்டுவோம். தமிழில் பேச வேண்டும் என்ற அவரின் ஆர்வத்திற்கு ஒரு சல்யூட்.

தமிழ்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆர்.ஜே. பாலாஜி அக்ஷய் குமார் தத்தித் தத்தி பேசியதை கேட்டுவிட்டு அடித்த கமெண்ட் தான் ஹைலைட். ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டியை விட உங்களின் தமிழ் நன்றாக இருந்தது என்று ஆர். ஜே. பாலாஜி கூறியதை கேட்டு அரங்கமே அதிர்ந்தது. அந்த ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி என்றால் என்ன என்பது உங்களுக்கே நான்றாகத் தெரியும்.

ஜிம்
அக்ஷய் குமார் தன் உடலை ஃபிட்டாக வைத்திருப்பது குறித்து நடிகர் விஷால் வீடியோ பதிவு மூலம் அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அக்ஷய் கூறியதாவது, நான் தினமும் காலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். சூரியோதயத்தை பார்க்கத் தவறியது இல்லை. என் வீட்டிலேயே ஜிம் வைத்துள்ளேன். உடலே கோவில் என்றார் அவர்.

கோரிக்கை
விஷால் பற்றியும், அவரின் ஃபிட்னஸ் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அரிசியே சாப்பிடுவது இல்லை என்று தெரிந்து கொண்டேன். அவர் இட்லி, தோசை கூட சாப்பிடுவது இல்லை என்று அவர் அம்மா வருத்தப்பட்டுள்ளார். வாரத்தில் ஒரு நாள் டயட்டை விடுவதில் தப்பில்லை. ஞாயிற்றுக்கிழமை மட்டுமாவது அரிசி சாப்பிட்டு அம்மாவை மகிழ்ச்சிபடுத்துமாறு விஷாலை கேட்டுக் கொள்கிறேன் என்றார் அக்ஷய் குமார்.


Click it and Unblock the Notifications











