Samrat Prithviraj Twitter review : “இந்திய சினிமாவின் பெருமை“.. கொண்டாடும் ரசிகர்கள் !

சென்னை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள சாம்ராட் பிரித்விராஜ் திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இன்று வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சாம்ராட் பிருத்விராஜாக அக்ஷய் குமாரின் நடிப்பை ரசிகர்கள் ட்விட்டரில் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

சாம்ராட் பிரித்விராஜ்

சாம்ராட் பிரித்விராஜ்

மன்னர் சாம்ராட் பிரித்விராஜ் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சாம்ராட் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். பிரித்விராஜின் மனைவியாகவும், முன்னாள் உலக அழகியான மனுஷி சில்லர், இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகிறார்.

முக்கிய ரோலில்

முக்கிய ரோலில்

இப்படத்தில் சஞ்சய் தத், சோனு சூட், அஷுதோஸ் ராணா, சாக்ஷி தன்வார் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சந்திர பிரகாஷ் திவேதி இயக்கியுள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அற்புதமான படம்

அற்புதமான படம்

சாம்ராட் பிருத்விராஜ் திரையில் ஒரு பிரம்மாண்டமான படமாக உள்ளது. என்ன ஒரு அற்புதமான படம். இயக்குநர் சந்திர பிரகாஷ் திவேதி போல ஒரு சிறந்த இயக்குனர் இந்த நாட்டில் இல்லை. இந்த படம் இது நிச்சயம் ஒரு பிளாக் பஸ்டர் தான் எனபதிவிட்டுள்ளார்.

வரலாற்று வெற்றி

வரலாற்று வெற்றி

படத்தை திரையில் பார்த்து நெகிழ்ந்த ஒரு நெட்டிசன்ஸ், சாம்ராட் பிருத்விராஜ் படம் பார்த்து வியந்துவிட்டேன். இந்த வரலாற்று வெற்றியை எந்த வார்த்தையாலும் விவரிக்க முடியாது. அக்ஷய் குமார் எப்போதும் போல் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். சோனுசூத், சஞ்சய்தத் மற்றும் மனுஷி சில்லர் அனைவரின் நடிப்பும் மிகவும் அருமை. கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இந்திய சினிமாவின் பெருமை

இந்திய சினிமாவின் பெருமை

அக்ஷன் குமார் சாம்ராட் பிரித்விராஜ் படத்திற்கு நான்கு ஸ்டார்களை கொடுத்துள்ளார். அக்ஷய் குமாரின் நடிப்பை வெகுவாக புகழ்ந்த அவர் இயக்குநர் சந்திரபிரகாஷ் திவேதியின் வசனம், திரைக்கதை மற்றும் இயக்கம் என அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். இந்த படம் இந்திய சினிமாவின் பெருமையை மீட்டு கொண்டு வரும் என பதிவிட்டுள்ளார்.

பிளாக்பஸ்டர் ஹிட்

பிளாக்பஸ்டர் ஹிட்

சாம்ராட் பிருத்விராஜ் படம் பிளாக்பஸ்டர் என்று கூறி ஒரு வார்த்தையில் முடித்துவிட முடியாது. அட்டகாசமான நடிப்பை அக்‌ஷய் குமார் வெளிப்படுத்தி உள்ளார். க்ளைமாக்ஸ் காட்சி பயங்கரமானது & சாம்ராட் பிருத்விராஜியின் மரணக் காட்சி உங்களை அழ வைத்து விட்டது. போர்க் காட்சி சூப்பர் விஷுவல் எஃபெக்ட்களுடன் நன்றாக உள்ளது என ட்விட்டரில் சாம்ராட் பிரத்விராஜ் படத்தை ரசிகர்கள் வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X