அக்ஷய் குமாருக்கு கொரோனா.. அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட சூர்யா ஜோதிகா அச்சம்!
மும்பை: பாலிவுட் நடிகர்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்ஷய் குமார். இவருக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் சர்ஃபிரா. இந்த படத்திற்கான பிரிவ்யூவில் நடிகர் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அக்ஷய் குமாருக்கு மூன்றாவது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் முறையாக அக்ஷய் குமார் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதற்குப் பிறகு, 2022 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று வைரஸால் அக்ஷய் குமார் மீண்டும் பாதிக்கப்பட்டார். இதனால் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அவரால் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க முடியவில்லை.

சர்ஃபிரா: அக்ஷய் குமாரின் சர்ஃபிரா படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என அவரும் அவரது ரசிகர்களும் நம்பிக்கொண்டு உள்ளனர். அதாவது ஒன்றன் பின் ஒன்றாக தோல்விகளை சந்தித்த அக்ஷய் குமாருக்கு, சர்ஃபிரா படம் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த படம் கடந்த 2020 ஆம் ஆண்டு அமெசான் பிரைம் ஓடிடியில் வெளியான தமிழ் திரைப்படமான சூரரைப் போற்று படத்தின் ரீமேக் ஆகும். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி தேசிய விருதுகள் வரை அள்ளியது மட்டும் இல்லாமல் வெற்றிகரமாகவும் மக்கள் மத்தியில் கமெர்சியலாக வெற்றிப் படமாக உருவான படம் சூரரைப் போற்று.
கொரோனா: தற்போது ஹிந்தியில் இந்த படம் ரிலீஸ் ஆகி நல்ல ரிவ்யூக்களையே பெற்று வரும் வேலையில், அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது படக்குழுவினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக சோர்வாக காணப்பட்ட அக்ஷய் குமாருக்கு இன்று காலை கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

அச்சத்தில் சூர்யா, ஜோதிகா: மேலும் படத்தின் ப்ரிவியூவ் மற்றும் புரோமோஷனில் கலந்து கொண்ட சூர்யா, ஜோதிகா நடிகர் அக்ஷய் குமாருக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டானது. தற்போது அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இருவரும் அச்சத்தில் இருக்கின்றனர். குறிப்பாக இவர்கள் வீட்டில் குழந்தைகளும் பெரியவர்களும் இருப்பதால் இவர்களது அச்சம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் இவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தியதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











