அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியல்.. ஹாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய இந்தி ஹீரோ!
மும்பை: அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில், இந்தியாவில் இருந்து ஒரு ஹீரோ மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
சர்வதேச அளவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுவது வழக்கம்.
சுமார் 100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் இடம்பெறுவார்கள்.

கெய்லி ஜென்னர்
இந்த ஆண்டுக்கான பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த கெய்லி ஜென்னர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மாடலும் தொழிலதிபருமான இவர், பிரபல ஹாலிவுட் நடிகை கிம் கார்தாஷியனின் உறவினர். காஸ்மடிக் நிறுவனம் நடத்தி வரும் இவரது ஆண்டு வருமானம், 590 மில்லியன் டாலர்.

கான்யே வெஸ்ட்
உலகின் இளம் வயது பில்லியனராக கடந்த ஆண்டும் போர்ப்ஸ் இதழில் இடம் பெற்றிருந்தார் இவர். இரண்டாவது இடத்தில் பிரபல அமெரிக்கா ராப் பாடகர் கான்யே வெஸ்ட் (Kanye West) இருக்கிறார். பிரபல ஹாலிவுட் நடிகையும் தொழிலதிபருமான கிம் கர்தாஷியனின் கணவரான இவரது வருமானம், 170 மில்லியன் டாலர்.

ரொனால்டோ
அடிதாஸ் நிறுவனத்துடன் செய்துகொண்ட விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து அதிகமான வருமானம் இவருக்கு கிடைத்துள்ளது. அடுத்த இடங்களை விளையாட்டு வீரர்களான ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்சி, டைலர் பெர்ரி, நெய்மர், ஹோவர் ஆகியோர் பிடித்துள்ளனர். இதில் இந்திய விளையாட்டு வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.

அக்ஷய் குமார்
இந்த லிஸ்டில், இந்தியாவில் இருந்து பிரபல ஹீரோ அக்ஷய் குமார் மட்டுமே இடம் பிடித்துள்ளார். 48.5 மில்லியன் டாலர் வருமானம் பெற்றுள்ள அவர், பிரபல ஹாலிவுட் ஹீரோக்கள் வில் ஸ்மித், நடிகை ஜெனிபர் லோபஸ், பாடகி ரைஹன்னா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார். அவர் 52 வது இடத்தைப் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











