twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    65 நாளா எங்க இருந்தீங்க அக்ஷய்.. சிபிஐக்கு மாறிய சுஷாந்த் வழக்கு.. திடீர் ட்வீட்டால் எழுந்த கேள்வி

    |

    மும்பை: மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கை சிபிஐ விசாரிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு நடிகர் அக்‌ஷய் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்

    கடந்த ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்து இருந்தனர்.

    ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும், சுஷாந்த் சிங் ரசிகர்களும் முன் வைத்து வந்தனர்.

    வாவ்.. உடம்பை வில்லாய் வளைத்து வொர்க்கவுட் செய்ததன் மாயம்.. குஷ்புவோட லேட்டஸ்ட் போட்டோஸ பாத்தீங்களா!வாவ்.. உடம்பை வில்லாய் வளைத்து வொர்க்கவுட் செய்ததன் மாயம்.. குஷ்புவோட லேட்டஸ்ட் போட்டோஸ பாத்தீங்களா!

    ரியா சக்கரவர்த்தி போட்ட வழக்கு

    ரியா சக்கரவர்த்தி போட்ட வழக்கு

    சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்கரவர்த்திக்கு சுஷாந்த் கொலையில் தொடர்பு இருப்பதாக சந்தேகங்கள் கிளம்பின. மேலும், சுஷாந்தின் தந்தை கே.கே. சிங், ரியா மீது பண மோசடி வழக்கு தொடுத்து இருந்தார். சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரைத்தது. இதனால், சிபிஐ விசாரிக்கக் கூடாது என்றும், மும்பை போலீசாரே வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் ரியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.

    பாதகமாக வந்த தீர்ப்பு

    பாதகமாக வந்த தீர்ப்பு

    ஆனால், நடிகை ரியா சக்கரவர்த்திக்கு பாதகமாகவே தற்போது தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கை சிபிஐ விசாரிக்க எந்த தடையும் இல்லை என்றும், நடிகை ரியா சக்கரவத்தியையும் சிபிஐ விசாரிக்கலாம் என்றும், மும்பை போலீசார் வசம் உள்ள சுஷாந்த் தொடர்பான அத்தனை வழக்குகளையும், தகவல்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

    ரசிகர்கள் பிரபலங்கள் உற்சாகம்

    ரசிகர்கள் பிரபலங்கள் உற்சாகம்

    மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவுக்கு முதல் முறையாக நீதி கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்தில் பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் இந்த தீர்ப்பை வரவேற்று வருகின்றனர். சிபிஐ விசாரணையில், நிச்சயம் குற்றவாளிகள் யார் என்ற தகவல் வெளியாகி, சுஷாந்த் மரணத்தில் தொடர்புடைய நபர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கின்றனர்.

    திடீர் ட்வீட்

    திடீர் ட்வீட்

    சுஷாந்த் சிங் மறைவு செய்தியை அறிந்த உடனடியாக ட்வீட் போட்ட பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், அதன் பிறகு சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தபோது, எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை. இந்நிலையில், தற்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான நிலையில், சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டதை வரவேற்கிறேன். உண்மை வெளியாகட்டும் என பதிவிட்டு இருக்கிறார்.

    65 நாளா எங்க போனீங்க

    65 நாளா எங்க போனீங்க

    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மர்மம் இருப்பதாக கங்கனா ரனாவத் உள்ளிட்ட பிரபலங்கள் தொடர்ந்து நீதி கேட்டு போராடி வந்த நிலையில், கருத்து ஏதும் தெரிவிக்காமல், இப்போ திடீரென ட்வீட் போடுறீங்களே, 65 நாளா எங்க போனீங்க என ரசிகர்கள் அக்‌ஷய் குமாரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    படத்தின் ரிலீசுக்காக

    படத்தின் ரிலீசுக்காக

    ஆலியா பட்டின் ‘சடக் 2' டிரைலருக்கு கிடைத்த எதிர்ப்பை தொடர்ந்து, லக்‌ஷ்மி பாம் படத்தின் டிரைலர் ரிலீஸையே வேண்டாம் என அக்‌ஷய் குமார் கூறியதாகவும், இந்நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாகவுள்ள லக்‌ஷ்மி பாம் படத்திற்கு எந்த எதிர்ப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக இப்போ குரல் கொடுக்கிறார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். அக்‌ஷய் குமார் மட்டுமல்ல எந்தவொரு முன்னணி நடிகரும் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக குரல் கொடுக்கவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பையே ஏற்படுத்தி இருக்கிறது.

    English summary
    Supreme Court orders CBI to take Sushant Singh Rajput case onwards. Akshay Kumar tweet and share his expression. Some netizens trolled him for not raise his voice before on that.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X