இனிமே கனடா குமாருன்னு யாராச்சும் சொல்வீங்க.. இந்திய குடியுரிமை ஆதாரத்தை காட்டிய அக்‌ஷய் குமார்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கனடா நாட்டின் குடியுரிமை பெற்றிருந்த நிலையில், அவரை தொடர்ந்து கனடா குமார் என நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். பாலிவுட் பிரபலங்களில் சிலரும் அக்‌ஷய் குமாரை அதன் காரணமாக பிரிவுப்படுத்தி பார்க்க ஆரம்பித்தனர். விமர்சனங்களும் தொடர்ந்து கிளம்பி வந்தன.

இந்நிலையில், தான் இந்திய குடிமகன் தான் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ ஆதாரம் இதோ என 77வது சுதந்திர தினமான இன்று தனது சோஷியல் மீடியா பதிவு மூலம் வெளிப்படுத்தி உள்ளார் அக்‌ஷய் குமார்.

Akshay Kumar unveils his Indian Citizenship after severan Canadian Kumar troll

விஜயகாந்த், அர்ஜுனை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு தேசிய பற்று மிகுந்த பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் அக்‌ஷய் குமார் என்பது கூடுதல் தகவல்.

ரஜினிக்கு வில்லனாக: தமிழில் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக அக்‌ஷய் குமார் காக்கா அரக்கனாக நடித்து மிரட்டி இருப்பார். பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் உள்ளிட்ட மூன்று கான் நடிகர்களுக்கு செம டஃப் கொடுத்து லீடு ரோலில் அசத்தி வரும் அக்‌ஷய் குமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

அக்‌ஷய் குமார் பிறந்தது எங்கே?: இந்தியாவின் அம்ரித்சரஸில் தான் ராணுவ வீரருக்கு மகனாக பிறந்தவர் அக்‌ஷய் குமார். படித்தது, வளர்ந்தது, சினிமாவில் அறிமுகமானது என அனைத்துமே இந்தியாவில் தான் செய்து வந்த அக்‌ஷய் குமாருக்கு கடந்த 2011ம் ஆண்டு கனடா நாடு சுற்றுலா துறையை வளப்படுத்தும் நோக்கில் அக்‌ஷய் குமாருக்கு கனடா நாட்டின் குடியுரிமையை வழங்கியது.

Akshay Kumar unveils his Indian Citizenship after severan Canadian Kumar troll

இந்திய குடிமகன் தான்: துபாய் நாட்டின் கோல்டன் விசா எப்படி ஏகப்பட்ட இந்திய சினிமா பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறதோ அதே போல அக்‌ஷய் குமாருக்கு கொடுகப்பட்டது தான் அந்த கனடா நாட்டின் குடியுரிமை. ஆனால், அதை வைத்து அக்‌ஷய் குமார் இந்தியக் குடிமகனே இல்லை என தொடர்ந்து பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

இந்நிலையில், 2019ம் ஆண்டு கனடா நாட்டு குடியுரிமையை திருப்பிக் கொடுத்து விட்டு இந்திய பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பம் செய்திருந்தார் அக்‌ஷய் குமார். இந்நிலையில், சுதந்திர தினமான இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இந்தியக் குடிமகன் தான் என்பதற்கான ஆதாரங்களை பதிவிட்டு ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X