துப்பாக்கியை அடுத்து அஜீத்தின் ஆரம்பத்தை ரீமேக் செய்ய விரும்பும் அக்ஷய் குமார்
மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அஜீத்தின் ஆரம்பம் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்புகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் ஹிட்டாகும் படங்களை இந்தியில் ரீமேக் செய்ய பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அவ்வாறு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை இந்தியில் ரீமேக் செய்வதில் வல்லவராக உள்ளார் பிரபுதேவா. அதனால் பாலிவுட் பிரபுதேவாவை வைத்து மசாலா படங்களை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தமிழ் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்புகிறார்.

ஆரம்பம்
கடந்த 31ம் தேதி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அஜீத்தின் ஆரம்பம் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்புகிறார் அக்ஷய் குமார். ரீமேக் உரிமையை வாங்க தான் தயாராக இருப்பதாக அவர் தயாரிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி
ஏ.ஆர். முருகதாஸ் தமிழில் விஜய்யை வைத்து எடுத்த துப்பாக்கி படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் தான் நடித்து வருகிறார்.

ரமணா ரீமேக்
விஜயகாந்த், சிம்ரன் நடித்த ரமணா படத்தை க்ரிஷ் என்பவர் இந்தியில் கப்பார் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். இந்த படத்தில் விஜயகாந்த் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கவிருக்கிறார்.

ரவுடி ராத்தோர்
முன்னதாக அக்ஷய் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தின் இந்தி ரீமேக்கான ரவுடி ராத்தோரில் நடித்தார். படத்தை பிரபுதேவா இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











